*இந்தாப்பா ராப்பிச்சை.. ரெண்டு நாளா வீட்டுக்காரர் ஊர்லே இல்ல. ரசம்தான் வச்சேன்.. வாங்கிட்டு போறியா..?
மவராசன் சமைச்சது இல்லியா.. சரி போடு தாயி.. போற உசுரு எப்படிப் போனா என்ன..?*
நகைச்சுவைகள், பொன்மொழிகள், சிறுகதைகள், கவிதைகள், ஆன்மிகம், சமூகம், அரசியல் , பண்பாடு, இயற்கை வைத்தியம், ஆகியவற்றின் என்னாலான சிறு தொகுப்புமுயற்சி. அன்பில்லாது அன்னமிடுதலும் ஊமைகண்ட கனவும் தமிழ் ஞானமில்லாதவன் அறிவும் ஒன்று.
*இந்தாப்பா ராப்பிச்சை.. ரெண்டு நாளா வீட்டுக்காரர் ஊர்லே இல்ல. ரசம்தான் வச்சேன்.. வாங்கிட்டு போறியா..?
மவராசன் சமைச்சது இல்லியா.. சரி போடு தாயி.. போற உசுரு எப்படிப் போனா என்ன..?*
சோ, லல்லு பிரசாத் யாதவ், சுப்ரமணிய சாமி இவர்களை வீரப்பன் கொண்டு போனால் யார் காப்பற்றபடுவார்கள்?
இந்த நாடு காப்பாற்றப்படும்.
ஒரே குழப்பமா இருக்குடி..
எதுக்கு..?
குடும்பக் கட்டுப்பாடு செஞ்சுகிட்டா 500 ரூபாயாம்.. கர்ப்பிணி உதவித் தொகை 5000 ரூபாயாம்.. ரெண்டையும் எப்படி வாங்குறதுன்னுதான்..!
என் காலுக்கு செருப்பில்லை என வேதனைப்பட்டேன் - காலே இல்லாத மனிதனைப் பார்க்கும் வரை.
- சீனப்பழமொழி .
நீங்கள் ஏன் எங்கள் நிறுவனத்தில் பணிபுரிய விரும்புகிறீர்கள்..?
எந்தப் புண்ணாக்குக் கம்பெனியிலாவது வேலை செஞ்சாதான் பொழப்ப ஓட்ட முடியும் .. எந்த நாய் வேலை குடுக்குதோ அங்க வேலை செய்ய வேண்டியதுதான்..அதைத்தவிர உன்கம்பேனி மேல பெருசா ஒண்ணும் மதிப்பு மரியாதை யெல்லாம் இல்லே ..!
உங்களுக்கு ஏன் இந்த வேலையைத் தரவேண்டும்..?
உன் கம்பெனி வேலையை யாராவது ஒருத்தன் செஞ்சுதானேஆகணு ம் .. என்கிட்டதான் கொடுத்துப் பாரேன்.
உங்களுடைய தனித்திறமை என்ன..?
வேலைக்கு சேர்ந்ததும், கடலை போட வழியிருக்கான்னு பார்ப்பேன் .. இங்கேருந்து என்னென்ன சுடலாம்ன்னு நோட்டம் உடுவேன்..உன் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்ததைச் சொல்லி ஊர் பூரா கடன் வாங்குவேன்.. அப்புறம் வேற கம்பெனிக்கு தாவ முயற்சி பண்ணுவேன் .. இதைத்தவிர உன் கம்பெனிக்கு சேவை செஞ்சு முன்னுக்குக் கொண்டு வரணும்ங்கிற மூட நம்பிக்கையெல்லாம் கிடையாது .
உங்கள் மிகப்பெரியபலம்..?
இதைவிட பெரிய சம்பளத்தில் வேலை கிடைச்சா அப்படியே உட்டுட்டு அங்கே ஓடிருவேன்..மனசாட்சி, நன்றியுணர்வு இதுக்கெல்லாம் முட்டாள்தனமா ,,இடமே கொடுக்காம கடுமையா நடந்துக்குவேன்..
பலவீனம் ..?
ஹி.. ஹி .. பெண்கள்..!
இதற்குமுன் வேலை பார்த்த நிறுவனத்தில் உங்கள் சாதனைகள் என்ன..?
அப்படி ஏதும் இருந்தா நான் ஏன் வேலை தேடி இங்கே வருகிறேன் .. அந்த சாதனைகளை பெருசா பில்டப்பண்ணி அங்கேயே வேணும்ங்கிற அளவுக்கு சம்பளத்தைக் கறந்துருக்க மாட்டேனா ..?
நீங்கள் சந்தித்த மிகப் பெரும் சவால் என்ன ..? அதை எப்படி வெற்றி கொண்டீர்கள்..?
ஆண்டவன் அருள்தான் காரணம் .. இதுவரைக்கும் எந்த நிர்வாகியும் மூணாவது மாசச் சம்பளத்தைக் கொடுக்கறதுக்கு முன்னே நான் ஒரு வெத்துவேட்டுன்னு கண்டுபிடிச்சதே இல்லே.
ஏன் இதற்கு முன் பார்த்த வேலையை விட்டு விட்டீர்கள்..?
நீங்கள் ஏன் இந்த வேலைக்கு நேர்காணல் நடத்த வேண்டிய அவசியம் வந்ததோ .. அதே காரணத்துக்காகத்தான்..!
இந்த பதவியில் நீங்கள் எதிர்பார்க்கும் அம்சங்கள் என்ன..?
நல்ல சம்பளம், 0 % வேலை,பக்கத்து சீட்டுல கண்ணுக்கு குளிர்ச்சியா ஒரு பெண் , நாட்டாமை பண்ண எனக்குக் கீழே ஒருகூட்டம் . அது போதும்.
பெண்: "ஹார்ட் அட்டாக் வந்தா என்ன முதலுதவி செய்யணும் டாக்டர்?"
டாக்டர்: "எதுக்கும்மா கேக்கறீங்க?"
பெண்: "பட்டுச்சேலை வாங்கின பில்லை என் புருஷன் கிட்ட காட்ட வேண்டிருக்கு."
ஓர் ஊருக்கு புதிய மனிதன் ஒருவன் வந்தான்.
‘‘எங்கே இருந்து வருகிறாய்? என்று கேட்டார்கள்.
‘‘தேவலோகத்திலிருந்து வருகிறேன் என்றான். கேட்டவர்கள் சிரித்தார்கள்.
‘‘உன்னை யார் இங்கே அனுப்பி வைத்தது?
‘‘கடவுள்தான் அனுப்பி வைத்தார்.
கேட்டவர்களுக்கு மேலும் சிரிப்பு.புத்தி சரியில்லாதவன் என்பதாகப் புரிந்து கொண்டு அவனை கோயிலுக்குக் கூட்டிச் சென்றார்கள். மனநலம் பாதிக்கப்பட்டவர்களைத் தெளிய வைக்கிற கோயில் அது. அங்கே இருந்த கல் மண்டபத் தூணில் இவனைக் கட்டிப் போட்டு விட்டார்கள்.இப்போது அவன் சிரித்தான்.
‘‘ஏன் சிரிக்கிறாய்?
‘‘என்னை அனுப்பி வைக்கிறபோது கடவுளே சொன்னார், இப்படி எல்லாம் நடக்கும் என்று!‘‘எப்படி எல்லாம் நடக்கும் என்று?‘‘உன்னைக் கட்டிப் போடுவார்கள்... கைகொட்டிச் சிரிப்பார்கள் என்று சொன்னார் கடவுள். அவர் சொன்னபடியே நடக்கிறது. ஆகவே, நான் அவருடைய தூதன் என்பதற்கு இதைவிட வேறு என்ன நிரூபணம் வேண்டும்?
மக்கள் யோசித்தார்கள்.
‘‘சரி. நீ என்னதான் சொல்ல வருகிறாய்?‘‘நம்புங்கள்... நான் ஒரு தீர்க்கதரிசி. கடவுளால் இங்கே அனுப்பப் பட்டவன். உங்களுக்கு வழிகாட்டவே இங்கே வந்திருக்கிறேன்.இப்போது இன்னொரு சிரிப்புச் சத்தம். இவனைவிட பலமாகச் சிரிப்பது கேட்டது. அந்தச் சத்தம் எங்கே இருந்து வருகிறது? அவனுக்குப் பின்னால், அதே மண்டபத்தில்! அங்கே இன்னொரு மனிதன் தூணில் கட்டப்பட்டிருக்கிறான்.
‘‘நீ ஏன் சிரிக்கிறாய்?
‘‘நீ பொய் சொல்கிறாய்... அதனால் சிரிக்கிறேன்!
‘‘எது பொய் என்கிறாய்?
‘‘கடவுள் உன்னை அனுப்பி வைத்ததாகச் சொல்வது பொய்!
‘‘அது எப்படி உனக்குத் தெரியும்?
‘‘நான் உன்னை அனுப்பி வைக்கவே இல்லையே!
இவன் அதிர்ச்சியோடு அவனை நிமிர்ந்து பார்த்தான்.அவன் சொன்னான் பரிதாபமாக... ‘‘நான்தான் கடவுள் என்று சொல்லிக் கொண்டு இங்கே வந்தவன். ஒரு மாதமாகக் கட்டிப் போட்டு வைத்திருக்கிறார்கள்.
நண்பர்களே!நானே கடவுளின் தூதன் என்கிறார்கள் சிலர்.நானே கடவுள் என்கிறார்கள் சிலர்.உண்மையான கடவுள் எங்கேதான் இருக்கிறார்?
ஒரு மனிதன், ஞானி ஒருவரைத் தேடிப் போனான். ‘‘நான் கடவுளைச் சந்திக்க வேண்டும்! என்றான்.அவர் ‘பளார் என்று இவன் கன்னத்தில் அறைந்து விட்டார்.இவன் பயந்து ஓடிப் போனான்.பக்கத்திலிருந்தவர்கள் ஞானியிடம் கேட்டார்கள்: ‘‘அவனை ஏன் அறைந்தீர்கள்?
‘‘அவன் ஒரு பைத்தியக்காரன்!
‘‘அப்படியா?‘‘
ஆமாம்! அவனையே அவன் தேடிக் கொண்டிருக்கிறான்!
ஒரு ஊருல தொண்ணூறு வயசு பெரியவரு ஒருத்தரு இருந்தாரு. அவரு ஒருநாள் குடும்ப டாக்டர்க்கிட்ட போய் நான் ஒரு கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு இருக்கேன், என்ன சொல்றீங்கன்னு கேட்டாரு. அதுக்கு டாக்டரு அதெல்லாம் வேலைக்காவது எதுக்கு ரிஸ்க்ன்னு சொல்லிட்டாரு. ஆனா இவரு கேக்கலை. இருபத்தியெட்டு வயசு பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டாரு.
நாலு மாசம் கழிச்சு திரும்ப டாக்டர பாக்க வந்தாரு… என்னமோ வேலைக்காவது சொன்னீங்களே, என் சம்சாரம் இப்ப மூணு மாசம்னு பெருமையா சொன்னாரு.
அதுக்கு டாக்டரு நான் ஒரு கதை சொல்றேன் கேளுங்கன்னு சொல்லி நான் ஒரு தடவை ஆப்பிரிக்க காட்டுக்கு போனப்ப ஒரு சிங்கம் என் எதிர்க்க வந்துச்சி. பயங்கரமா உறுமிச்சி. எனக்கு வேற வழி இல்ல. நான் உடனே என் கையில் இருந்த குடையால அந்த சிங்கத்தை சுட்டேன். அந்த சிங்கம் குண்டு பாய்ஞ்சி செத்துப் போச்சு என கதையை முடிந்தார்.
உடனே அந்த பெருசு அது எப்படி குடையில இருந்து குண்டு வரும்? பின்னாடி இருந்து யாராவது துப்பாக்கியால சுட்டுருப்பாங்கன்னு சொன்னாரு. அதுக்கு டாக்டரு உங்க விஷயத்திலயும் அதான் நடந்துருக்குதுன்னு சொன்னாரு.
'எட்டுப்பட்டிக்கும் சொந்தக்காரன்'னு சொன்னத நம்பி பொண்ணக் கொடுத்தது தப்பாப் போச்சு""
ஏன்.. என்னாச்சு?""
அவன் கேரளாக்காரன். அங்கே 'பட்டி'ன்னா நாயாமே!!"
மனைவி: இந்த வீட்ல ஒண்ணு நான் இருக்கணும் இல்ல உங்க அம்மா இருக்கணும்!
கணவன்: வேலைக்காரிய மட்டும் விட்டுட்டு நீங்க ரெண்டு பேரும் எங்கேயாவது போய்த் தொலைங்க.
(பின்குறிப்பு : அங்கு இலவச டிவி திட்டம் ஏதும் இல்லை போலும்)
நேத்து உன்னைத் தேடி உன் வீட்டுக்கு வந்தேன். உன்னை எங்கேன்னு உங்க அப்பாகிட்ட கேட்டதற்கு "அந்தமாடு எங்க மேயுதோ?'ன்னு சொன்னாருடா. உனக்கு உன் வீட்டில் மரியாதை அவ்வளவுதானா?'' "
"ஓகோ... உன்னைத் தேடி ஒரு கழுதை வந்திச்சின்னு சொன்னாரு... அது நீ தானா?''
ஒரு டீக்கடையில்: என்னையா டீயிலே “ஈ” குளிக்குது!
ஆமா...நீ கொடுக்கர இரண்டரை ரூபா காசுக்கு திரிஷ்ஷாவா வந்து குளிப்பா! பேசாம குடிய்யா.
ஆசிரியர்: அசோகர் ஏன் குளங்கள் வெட்டினார்? மரங்கள் நட்டார்?
மாணவன்: குளங்கள்... பெண்கள் குளிக்க! மரங்கள்... பின்னாலிருந்து ஆண்கள் எட்டிப்பார்க்க!
டாக்டர் எனக்கு வர வர சிறிது தூரத்தில் இருக்கும் பொருட்கள் தெரியவில்லை.
சரி இங்கே வாருங்கள் . அதோ தெரிகிறதே அது என்ன?
நிலா டாக்டர்
நல்லது. இதை விட நீங்கள் எவ்வளவு தூரம் தெரிய வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்கள்.
'நம்மோட கள்ளத்தொடர்பு தெரிஞ்சுட்டதால, உன்னை வேலையை விட்டு நிறுத்த போறா என் மனைவி !' '
கவலைப்படாதீங்க எஜமான், உங்களுக்கு நான் வெளியில இருந்து ஆதரவு தர்றேன் !'
தலைவருக்கு எல்லாமே பொருத்தமாய் அமைந்திடுச்சா..... எப்படி ?
அவருக்கு ஒரு சின்ன வீடாம் !.... தேர்தலில் அவர் சின்னமும் வீடாம் !
'நெஞ்சில் ஈட்டி பாயும் அளவிற்கு நீங்கள் எதிர்த்து போர் புரிந்தீர்களா மன்னா ?' '
ஊஹூம்... எவ்வளவு தூரத்தில் துரத்தி வர்றான்னு திரும்பிப் பார்த்தபோது. சண்டாளப் பாவி அம்பை எய்திட்டான்யா !'
'அவர் போலி டாக்டர்னு எப்படிக் கண்டுபிடிச்ச?
சில்லறை இல்ல..தர வேண்டிய மீதி பாக்கிக்கு ஓரு ஊசி போடவான்ணு கேக்குறாரே!'.
'அமைச்சரே... இங்க விரித்திருந்த கம்பளம் எங்கே ?
சம்பளம் தர வக்கில்லை....கம்பளம் ஒரு கேடா’னு ஒரு சேவகன் சுருட்டிச் சென்று விட்டான் மன்னா !'
குமாஸ்தா : போடா, முட்டாள் !
டைப்பிஸ்ட்: போடா, நீ தான் முட்டாள் !
மேனேஜர்: என்ன அங்கே கூச்சல்? நான் ஒருத்தன் இங்கே இருப்பது உங்களுக்கு தெரியலையா ?
'யோவ்! நான் இல்லாதப்ப புகார் தரவந்த பொண்ணுகிட்ட தப்பா நடந்துக்க முயற்சி பண்ணினியாமே?
நீங்கதானே ஸார் உங்க வேலையையும் சேர்த்து என்னை பார்க்க சொல்லிட்டு போனீங்க?
'சாப்பிடும்போது ஏம்பா சிரிக்கறே?' '
சிக்கன் செய்து தரலைன்னு மனைவியை அடிச்சேன்... இப்ப வாரம் ரெண்டு தடவை சிக்கன் கிடைக்குது!'
நமது சமுதாயம் இப்போது இருக்கும் தாழ்ந்த நிலைமைக்கு மதம் காரணம் அல்ல. மதத்தை முறையாகப் பின்பற்றாமல் போனதுதான் சமுதாயத்தின் வீழ்ச்சிக்குக் காரணம் என்று நான் சொல்கிறேன்.
- விவேகானந்தர்
அன்புள்ள மருமகனுக்கு,
இங்கு எங்கள் ஊரில் ஒரே கலவரமாக இருக்கிறது. ஊருக்கு புதிதாக வந்த இரண்டு பேரை ஒரு கும்பல் வெட்டி கொலை செய்து விட்டு அவர்கள் அணிந்திருந்த நகைகளைக் கொள்ளை அடித்துச் சென்று விட்டது. ஊருக்குள் புதிதாக யார் வந்தாலும் வெட்டாமல் விட மாட்டோம் என்று ஒரு கும்பல் சுற்றி திரிகிறது. ஆதலால் தலை தீபாவளிக்கு நீங்கள் அவசியம் வரவும்.
இப்படிக்கு
உங்கள் அன்பு மாமனார் ,
அன்புக்கரசன்.
டாக்டர் உட்காரும் இடத்தில் கட்டி இருக்கு நான் என்ன செய்ய ?
கட்டி இல்லாத இடமா பாத்து கொஞ்சம் தள்ளி உட்காருங்களேன்.
ஒரு காதலன் மிகவும் வருத்ததோடு சொன்னான் : நானும் என் காதலியும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்தோம். ஆனால் எனக்கு அவளுடன் சேர்ந்து சாவதற்கு கூட கொடுத்து வைக்கவில்லை. அவள் மட்டும் இறந்து விட்டாள். நான் பிழைத்துக் கொண்டேன்.
அது எப்படி என்று கேட்டார் ஒருவர், அதற்கு இவன் பதில்.
"அவள் கயிற்றில் தொங்கினாள். நான் அவள் காலைப் பிடித்துத் தொங்கினேன்"
ஒரு ஊரிலே ஒரு ஏழை வியாபாரி இருந்தான். அவன் 500 கிராம் எடையுள்ள ரொட்டி விற்று வந்தான்.தினமும் அரிசி விற்கும் ஒரு தொழிலாளி இந்த ஏழை வியாபாரியிடத்திலேயே நித்தமும் ரொட்டி வாங்கி சாப்பிட்டு வந்தார்.ஒரு நாள் இந்த அரிசி முதலாளிக்கு ( தொழிலாளி) வாங்கி வந்த ரொட்டியின் மீது சந்தேகம் வந்தது. உடனே அதனை படிக்கல்லு போட்டு நிறுத்தார்.அப்போது அந்த ரொட்டி 450 கிராம் மட்டுமே இருப்பதாகக் காட்டியது. உடனே இவருக்கு சரியான கோபம். தன்னை ஏமாற்றி விட்டதாக அந்த ஏழைமீது வழக்குப் போட்டார்.வழக்கும் நடைபெற்றது. அப்போது நீதிபதி முன்னிலையில் அந்த ஏழை அந்த ரொட்டி தான் விற்ற ரொட்டி என்றும்....450 கிராம் இருப்பதை தான் ஏற்கிறேன் என்றும் கூறினான்.இதனை ஏன் இப்படி செய்தாய் என்று நீதிபதி கேட்டார்.அதற்கு அவன்...மிகவும் தாழ்மையாக ஐயா...நான் வீட்டிற்கு கொண்டு செல்ல தினமும் இவர் கடையில்தான் 500 கிராம் அரிசி வாங்குவேன். என்னுடைய படிகல் தேய்ந்துவிட்டபடியால்.. இவரிடம் வாங்கிய 500 கிராம் அரிசியை வைத்தே இதுநாள் வரையில் வியாபாரம் செய்துவந்தேன்.இப்போது மனம் வேதனையடைகிறேன்....இந்த முதலாளியின் கடையில் வேண்டிய அரிசியின் நிறுவையை நம்பி பல மக்களுக்கு 50 கிராம் குறைவாக ரொட்டிகளை விற்றுவிட்டேன் என்று..உடனே அந்த அரிசிக்கடை முதலாளியின் அரிசிகளை நிறுத்துப்பார்தால் எல்லாப்பொதிகளுமே 450 கிராமாகவே காணப்பட்டது.
பார்த்தீர்களா இதில் யார் மோசக்காறர்கள்..? என்று..?
மகன் : அப்பா, 'மதர் டங்' என்ற காலத்துக்கு நேரே என்ன எழுதனும்?""
அப்பா : ரொம்ப 'நீளம்'னு எழுது"...
காது வலிக்குதுன்னு நீங்க கொடுத்த மாத்திரையில் வலிசுத்தமா நின்னு போச்சு டாக்டர்'..."
அப்படியா.....இப்ப எதுக்காக வந்திருக்கீங்க?""
என்ன டாக்டர் வாயை மட்டும் அசைக்கறீங்க?....."
இருக்க வேண்டியது: தூய்மை, நீதி, நேர்மை.
ஆள வேண்டியது: கோபம், நாக்கு, நடத்தை.
பெற வேண்டியது: அன்பு, தைரியம், மென்மை.
கொடுக்க வேண்டியது: இல்லாதவருக்கு ஈதல், துன்பத்திற்கு ஆறுதல், தகுதிக்குப் பாராட்டு.
அடைய வேண்டியது: ஆன்ம சுத்தம், முயற்சி, உள்ள மகிழ்வு.
தவிர்க்க வேண்டியது: துன்பம் செய்தல், முரட்டுத்தனம், நன்றி இல்லாமை.
- பைபிள்
ஒருவர்: என்னப்பா... ஒரு மணி நேரத்திற்கு ஒரு தரம் பிச்சை கேட்டு வர்ற...?
பிச்சைக்காரன்: இந்த ஏரியாவை இரண்டு லட்சம் ரூபாய்க்கு ஏலத்திற்கு எடுத்திருக்கேங்க...
நோயாளி: என்னை சீக்கிரம் காப்பாத்தணும்னு உங்களுக்கு இருக்கற அக்கறை அந்த நர்சுக்கு இல்லே பாருங்க டாக்டர்!
டாக்டர்: எப்படிச் சொல்றீங்க?!
நோயாளி: பாருங்களேன்... எனக்கு ஏறிக்கிட்டு இருக்கற ரத்தம் சீக்கிரமா ஏறக்கூடாதுன்னு, 'சொட்டுச் சொட்டா' விழற மாதிரி திருப்பி வச்சுட்டுப் போவுது அந்தப்பொண்ணு!
மனைவி : ஏங்க எதுத்த வீட்டுக்காரர் அவர் மனைவிக்கு தினமும் புடவை வாங்கிக் கொடுக்கிறார். நீங்களும் தான் இருக்கீங்களே ?
கணவன் : என்னடி செல்லம் செய்ய எனக்கும் வாங்கிக் கொடுக்கணும்னு ஆசைதான். ஆனா நான் வாங்கிக் கொடுத்தா அவங்க வாங்கிக்குவாங்களோ என்னமோ !
ஒரு நிறுவனத்தின் முதலாளியுடைய நாயைக் காணவில்லை. அவர் தனது உதவியாளரிடம் பத்திரிகையில் விளம்பரம் கொடுக்குமாறு கூறினார். அவர் விளம்பரம் கொடுத்த மறுநாள் உதவியாளர் வேலை நீக்கம் செய்யப்பட்டார். அவர் கொடுத்த விளம்பரம்
"முதலாளி நாயைக் காணவில்லை"
புதிதாக நகரத்திற்கு வந்த ஒருவர் ஒரு இடத்தில் சிறுநீர் கழிக்கிறார். அதைப் பார்த்த மற்றொருவர், ஐயா இங்கு சிறுநீர் கழிக்காதீர்கள், போலீஸ் பார்த்தால் பிடித்துக் கொண்டு போய் விடும் என்றார். அதற்கு அவர்
"விடுங்க தம்பி சும்மா கீழே வீணாகப் போவதுதானே வேண்டுமேன்றால் பிடித்துக்கொண்டு போகட்டும்".