Earn Money - பணம் சம்பாதிக்க

வியாழன், 12 பிப்ரவரி, 2009

இராமலிங்க ராஜூவும் ஐந்து வயது சிறுமியும்

பத்திரிக்கை செய்திகள்

ஒன்று - ரூபாய் இருநூற்று முப்பது திருடிய சிறுமிக்கு அடி உதை.

இரண்டு - ரூபாய் எட்டாயிரம் கோடி மோசடி செய்த இராமலிங்க ராஜூவுக்கு சிறை விதிகளின் படி சலுகைகள்.

சட்டத்தின் முன் அனைவரும் சமமா? இந்த இரண்டு நிகழ்வுகளையும் பார்த்தால் மேற்கண்ட கேள்வி அனைவர் மனதிலும் எழும்.

முதலாவதாக அந்த சிறுமி திருடியது ரூபாய் இருநூற்று முப்பது. அவளுக்கு கிடைத்த தண்டனை சிறுமி என்றும் பாராமல் சில மோசமான காவலர்களால் தாக்கப்பட்டது. காவலர்களே உங்கள் வீரத்தை ஒரு சிறுமியிடம் தான் காட்ட வேண்டுமா? ஐந்து வயது என்பது அறியாத வயதுதானே? நாம்தானே தவறென்றால் தவறென்று சுட்டிக்காட்டி அறிவுறுத்த வேண்டும். அடிப்பது எந்த விதத்தில் நியாயம்?

இரண்டாவது இராமலிங்க ராஜூ மோசடி செய்தது ரூபாய் எட்டாயிரம் கோடி. அவருக்கு நீதிமன்ற விதிகளின் படி (என்ன விதியோ) அவருக்கென தனியான சொகுசு குளுகுளு அறை, கட்டில், மெத்தை, தொலைக்காட்சி , வீட்டுச் சாப்பாடு மற்றும் இன்ன பிற வசதிகள். அவருக்கு இது போன்ற வசதிகள் செய்து கொடுப்பதை நிறுத்த வேண்டும் என்பதோ, சிறுமியின் திருட்டையும், அதேபோல் லஞ்சம் வாங்கியோ, அல்லது திருடியோ , வேறுபல குற்றங்களுக்காக தண்டனை பெறுகின்ற குற்றவாளிகளின் குற்றங்களை நியாயப்படுத்த வேண்டும் என்பதோ இந்த கட்டுரையின் நோக்கமல்ல.
மாறாக அரசியல் சட்டம் என்பது அனைவருக்காகவும், சட்டத்தின் முன் அனைவரும் சரிசமம் என்பதற்காகவும் உருவாக்கப்பட்டது தானே ஒழிய ஏற்றத்தாழ்வுகளுடன் இருப்பதற்காக அல்ல என்பதை நினைவு கூறுவதற்காகவே.

இது போன்ற சம்பவங்களை பார்ப்பவர்கள் மத்தியில் எந்த ஒரு குற்றமாயினும் சிறிய அளவிலே இல்லாமல் பெரிய அளவிலே செய்தால் தண்டனை குறைவாக அல்லது சிறிய அளவில் தன்டனையுடன் சகல வசதிகளும் கிடைக்கும் (முக்கியமாக சில அரசியல்வாதிகள்) என்றதொரு தோற்றத்தை ஏற்படுத்தி விடாதா? தவறான முன்னுதாரணம் வேறு ஆகி விடுமே.

மதி கொண்ட மனிதனால் இயற்றப்பட்ட விதி(கள்) ஏன் சில நேரங்களில் சிலருக்கு ஒற்றைத் தராசாகவே நிற்கிறது.

- இந்திய அரசியல் சட்ட திட்டங்களுக்கும், இறையாண்மைக்கும் கட்டுப்பட்ட இந்திய தமிழன்.



2 கருத்துகள்:

  1. அன்பின் தோழர். முத்துப்பாண்டிக்கு,

    வாத்துக்கள். தங்களின் வலைப்பூவின் புதிய வாசகன் நான் என்பதை தாங்கள் அறிந்திருக்கலாம்!
    வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் வாசிப்பவன் நான். எனக்கு ஒவ்வாத விசயங்களையும் அறிந்து கொள்வதில் ஆர்வலன்.

    தங்களின் வலைப்பூவில் நல்ல சிந்தனைகள் உள்ளன. வாழ்த்துக்கள். அதுபோலவே, உங்களின் சிந்தனைகளையும் அவ்வப்போது எழுதுங்கள். அதை வாசிக்க ஆவலாக உள்ளேன்.

    தமிழன்புடன்,
    இனியஹாஜி
    www.iniyahaji.blogspot.com

    பதிலளிநீக்கு
  2. தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. உங்களிடம் இருந்து நான் வாழ்த்துப் பெற்றதை மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். அதை விவரிக்கும் அளவுக்கு வார்த்தைகள் இல்லை. மேலும் தங்களின் கவனத்திற்கு,

    கல்லூரிகள் மற்றும் அதைச் சார்ந்த தங்கும் விடுதிகளுக்கு காலவரையற்ற விடுமுறை

    அண்ணன் சாக மாட்டார் . திண்ணையும் காலியாகாது - முதல்வர் பேச்சு

    இராமலிங்க ராஜூவும் ஐந்து வயது சிறுமியும்

    இவை மூன்றும் என்னுடைய சுய சிந்தனையின் சொந்தக் கருத்துக்களே.

    தங்களின் வாழ்த்துக்கு மீண்டும் நன்றிகள்.

    என்றென்றும் அன்புடன்,

    இரா. முத்துப்பாண்டியன்

    பதிலளிநீக்கு