Earn Money - பணம் சம்பாதிக்க

செவ்வாய், 12 ஏப்ரல், 2011

தனி மனிதனுக்குப் போட்டால் பிச்சை… தமிழ்நாட்டுக்கே போட்டால் இலவசமா ?

தனி மனிதனுக்குப் போட்டால் பிச்சை… தமிழ்நாட்டுக்கே போட்டால் இலவசமா ?

என் தேசத்தை நாசமாக்கிய ஒரே சொல்… இலவசம்! – குன்றக்குடி அடிகளார்.



ஆனால், ‘ஏழைகள் இருக்கும் வரை இலவசங்கள் தொடரும்!’ என்கிறார் தன்மானத் தமிழர்களைக் காக்கப் பிறந்த தலைவர் கருணாநிதி.

இலவசங்கள் தொடரும் வரை ஏழைகள் தொடருவார்கள் என்கிற பேருண்மை அந்தப் பெரியவருக்குத் தெரியாதுபோலும்.

பசியில் வாடுபவனுக்கு மீனைக் கொடுக்காதே… மீன் பிடிக்கக் கற்றுக்கொடு! » என்கிற மேலை நாட்டுப் பொன்மொழி இந்த ஏழை நாட்டுத் தலைவர்களுக்கு ஏன் புரியாமல்போனதோ?

தொலைக்காட்சி இலவசம், உடுப்பு இலவசம், அடுப்பு இலவசம் என அனுதினமும் ஓர் அறிவிப்பை வெளியிட்டு, கையேந்தும் பெருமக்களை பெருக்கிக்கொண்டே போகிறது இந்த அரசாங்கம்.

65 ஆண்டு கால சுதந்திரத்தில், 45 ஆண்டுகள் இந்தத் தாய்த் தமிழகத்தை திராவிட இயக்கங்கள் ஆண்டிருக்கின்றன. இன்றைக்கு இலவசத்தை மகத்தான திட்டமாக வாய் வலிக்கச் சொல்பவர்கள், இத்தனை காலங்கள் ஆண்டும் என் மக்களைக் கையேந்தவைத்த கயமைக்குப் பொறுப்பு ஏற்பார்களா?

கலைஞரின் ‘இளைஞன்’ படம் தமிழ்த் திரையுலகத்தின் புரட்சியாய், புகழாரக் கூட்டத்தால் கொண்டாடப்படுகிறது. மாக்ஸிம் கார்க்கியின் ‘தாய்’ நாவலை, தாய்க் காவியமாக வடித்த முதல்வர் பெருமகனாருக்குச் சொல்கிறேன்… அய்யா, கார்க்கியின் எழுத்துகள் மேல் நீங்கள்கொண்டு இருக்கும் ஈர்ப்பும் பிரியமும் என்னை வியக்கவைக்கிறது. கார்க்கி எழுதிய சாலச் சிறந்த வாக்கியம் ஒன்றை உங்களுக்குச் சொல்கிறேன்.

‘பிச்சை போடுபவனைக் காட்டிலும் அருவருக்கத்தக்கவன் யாரும் இல்லை. பிச்சை எடுப்பவனைக் காட்டிலும் பரிதாபத்துக்கு உரியவன் யாரும் இல்லை!’

கார்க்கியின் எழுத்துகளைப் பல சந்தர்ப்பங்களில் புகழ்ந்து உரைத்திருக்கும் நீங்கள், இந்த வரிகளுக்கு என்ன அய்யா பதில் சொல்ல முடியும்? உடனே, பிச்சைக்கும் இலவசத்துக்கும் வித்தியாசம் இருக்கிறது என வழக்கம்போல் விளக்கப் புராணம் பாடாதீர்கள். தனி மனிதனுக்குப் போட்டால் பிச்சை… தமிழ்நாட்டுக்கே போட்டால் இலவசமா? எங்களின் பணத்தை எங்களுக்கே பிச்சையாக்கும் வித்தையை இத்தனை காலம் நீங்கள் பயன்படுத்தாமல் இருந்ததே ஆச்சர்யம்தான்.

இலவசத் திட்டங்களுக்காக அரசாங்கம் இழக்கும் தொகையை நீங்கள் எதன் மூலமாக ஈடுகட்டுகிறீர்கள்? மது விற்பதன் மூலமாக… ஏழைக் குடியானவன் சாராயம் காய்ச்சினால், சட்டப்படி அது குற்றம். அரசாங்கமே சாராயம் காய்ச்சினால், அது திட்டம். நல்லா இருக்கிறதய்யா உங்கள் நியாயம்? தீபாவளி தினத்தில் மட்டும் 90 கோடிக்கு சாராயம் விற்றதாக இந்த அரசாங்கம் சாதனை அறிக்கை வெளியிடுகிறது. வயிற்றுக்கு விஷம் வைத்துவிட்டு, வாய்க்கு உணவு கொடுப்பதுதான் உங்கள் சாதனையின் மகத்துவமா அய்யா?

இலவசம் என்றால் என்ன பொருள் உங்கள் அகராதியில்? பல்துறைப்பட்ட வருமானத்தின் அரசுத் திட்டங்களைச் செயல்படுத்தியதுபோக, மீதம் இருக்கும் உபரி வருமானத் தொகையை வைத்து மக்களுக்கு ஏதாவது வழங்கினால் அதற்குப் பெயர்தான் இலவசம். ஆனால், 80 ஆயிரம் கோடியை தமிழகத்தின் கடனாக ஏற்றிவைத்துவிட்டு, இழுத்துக்கோ பறிச்சுக்கோ என்கிற நிலைமையிலும், இலவசத்தை வழங்கினால், அதற்கு உண்மையான அர்த்தம் ‘உள்நோக்கம்’ என்பதுதானே!

உடனே அறிவார்ந்தவரும் மூத்த அமைச்சருமான அய்யா அன்பழகனார் அறிவிக்கிறார்… ‘தமிழக அரசின் 80 ஆயிரம் கோடி கடன் தமிழக மக்களைப் பாதிக்காது!’ அப்படி என்றால், எங்களின் கடனை கன்னடக்காரன் கட்டுவதாகச் சொல்லி இருக்கிறானா? இல்லை தெலுங்குக்காரன் திரட்டிக் கொடுப்பதாகச் சொல்லி இருக்கிறானா?

இலவசங்கள் தொடர்ந்துகொண்டே போகட்டும்… என்றைக்கோ ஒரு நாள் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு, இலவசங்களைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டால், தமிழகத்தின் நிலை என்னாகும் என்பது உங்களின் புத்திக்குப் புலனாகவில்லையா முதல்வரே?

இலவசம் இல்லாமல் போனால், பிறர் சவம் என்றாலும், பிய்த்துத் தின்னும் நிலை வந்துவிடாதா? இத்தனை காலம் உண்டபடியே உறங்கியவனை, ஒரே நாளில் உழைப்புக்குப் பழக்கப்படுத்திவிட முடியுமா? கொலை, கொள்ளை, வழிப்பறி என இந்த நாடே சுடுகாடாகிவிடாதா? அப்படி ஒரு நிலை வரத்தானே இத்தனை இலவசங்களை அறிவித்து, எம்மக்களின் சொரணைக்குச் சுருக்குப் போட்டுவிட்டீர்கள்?

தேர்தல் நெருங்க… நெருங்க… எப்படி எல்லாம் இலவசங்களை அறிவிக்கலாம் என மூளையைக் கசக்கி முப்பொழுதும் யோசிக்கிறீர்கள். வாரம் ஐந்து முட்டை என அறிவித்து குழந்தைகளைக் குதூகளிக்கவைத்தீர்கள்… இத்தனை காலம் ஒரு முட்டை போட்ட கோழிகள் திடீரென ஐந்து முட்டைகள் போட ஆரம்பித்துவிட்டதா அய்யா? நாலரை ஆண்டு காலம் ஏழைகள் எந்தக் குடிசையில் வாழ்ந்தாலும் சரி என நினைத்த நீங்கள், இப்போது திடீரென வீடு வழங்கும் திட்டத்துக்கு வித்திட்டு இருக்கிறீர்கள். கடகட வேகத்தில் மூன்று லட்சம் வீடுகளைக் கட்டவைக்கும் நீங்கள், அடுத்த மூன்று லட்சம் பேருக்கு வீடு கட்டிக் கொடுப்பதற்கான ரசீதைக் கொடுத்து இருக்கிறீர்கள். ‘எங்கள் ஆட்சி மீண்டும் வந்தால், உங்களுக்கு வீடு நிச்சயம்!’ என்பதை ஏழைகள் மனதில் எவ்வளவு சூசகமாக ஏற்றி இருக்கிறீர்கள் பார்த்தீர்களா? அடிக்கத் திட்டமிட்டு இருக்கும் கொள்ளையில் மக்களையும் மறைமுகப் பங்குதாரர்களாக மாற்றுவதற்குத்தானே இலவசம் என்கிற பெயரில் இந்தக் கையூட்டு?

ஆனால், உங்கள் நெஞ்சத்தில் கைவைத்துச் சொல்லுங்கள்… இலவசமாக்கப்பட்டு இருக்கவேண்டியது கல்வியும், மருத்துவமும்தானே… ஏழைக்கு ஓர் உயிர்; பணக்காரனுக்கு ஓர் உயிர் என்கிற பாராமுக நிலைப்பாடுதானே இன்றுவரை தொடர்கிறது. கல்வி ஏற்றத்தாழ்வுகளை இன்று வரை இந்த அரசாங்கத்தால் களைந்து எடுக்கமுடியாமல் போனது ஏன்?

ஒரு ரூபாய்க்கு அரிசி போட்டு, ‘உழைப்பு தேவை இல்லை!’ என்கிற சோம்பேறித்தனத்தை விதைப்புச் செய்தீர்கள். புத்தியை மழுங்கடிக்க இலவசத் தொலைக்காட்சி கொடுத்தீர்கள். எவன் வீட்டில் இழவு விழுந்தாலும் தன் வீட்டில், ‘மானாட மயிலாட’ ஆடினால் சரி என்கிற சாக்கடை எண்ணத்துக்குள் ஒவ்வொரு தமிழனையும் தள்ளினீர்கள். உங்களின் இலவசம் ஏற்படுத்திய பாதிப்பு என்ன என்பதை காவிரிக் கரையோர விவசாயிகளிடம் கேட்டுப் பாருங்கள்… கூலிக்கு வேலை இல்லாமல் திண்டாடிய காலம் போய், வேலைக்கு ஆள் இல்லாமல் அல்லாடும் காலம் உருவாகி இருக்கிறது. இது ஆரோக்கியமான மாற்றம் அல்ல அய்யா… அயோக்கிய மாற்றம்.

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் விவசாய மாவட்டங்களில் பட்டினிச் சாவுகள் தொடர்ந்தபோது, அரசாங்கமே சோறு போடும் என அறிவித்தார் அன்றைய முதல்வர் ஜெயலலிதா. கூட்டுப் பொறியலோடு குக்கிராமங்கள்தோறும் சாப்பாடு தயாரானது. அப்போது நீங்கள் சொன்ன வார்த்தைகள் என்ன தெரியுமா அய்யா… »ஊருக்கே படியளந்த மக்களை சோற்றுக்குக் கையேந்த வைத்துவிட்டார் ஜெயலலிதா!

அந்த அம்மையாரின் நிலைப்பாட்டை நான் நியாயப்படுத்தவே இல்லை. ஆனால், அன்றைக்கு எம் விவசாய வர்க்கம் கையேந்தியதைக் காணச் சகிக்காத நீங்கள், இன்றைக்கு ஒரு ரூபாய்க்கு அரிசி போடுகிறீர்களே… நீங்கள் அரிசி போட்டால், அது மகத்தான திட்டம்… அந்த அம்மையார் ஆக்கிப்போட்டால் அது குற்றமா?

நாவைச் சுழற்றியே நாட்டைச் சுழற்றும் உங்களின் அபூர்வ ஆட்சியை மீண்டும் தக்கவைக்க நீங்கள் தீட்டி வரும் சில திட்டங்கள்பற்றிக் கேள்விப்பட்டேன். ‘ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஓர் அலைபேசி இலவசம்’ என அறிவிக்கப்போகிறீர்களாமே… தொலைக்காட்சியை இலவசமாக வழங்கி இணைப்புக்கு எங்களிடமே பணம் பறித்ததைப்போல, அலைபேசியை இலவசமாக வழங்கி இணைப்புக்கு எந்த நிறுவனத்திடம் பேசி வைத்திருக்கிறார்களோ?

உலகத்தில் தமிழகத்தைத் தவிர வேறு எங்கேயுமே சுய மரியாதைக்கு கட்சி தொடங்கியதாகவோ, தன்மானத்துக்காக இயக்கம் தொடங்கியதாகவோ, சரித்திரம் இல்லை. ஆனால், இன்றைக்கு அவமரியாதையின் அடையாளமாகவும், அவமானத்தின் சின்னமாகவும் எம் மக்கள்

கருணாநிதிக்கு ஒரு கவிதை

கன்னித்தமிழ்ப் பெண்ணை கயவர்கள் கற்பழிக்க
கைகட்டி வாய்ப்பொத்திகைக்கூலியாய் நின்று,
கண்ணகிக்கு சிலையெடுத்து கவிபாடும் கறுப்பாடு!

தம்பி, தம்பியென்று தமிழனை நம்பவைத்து
தக்க சமயத்தில் தலையறுக்கும் கருங்காலி!
சொல்லிச்சொல்லி உனை வரலாறு ஏசும்!
உன் பெயர் சொன்னாலே தமிழுக்கு கூசும்.

சொத்துக்குவிப்பதையே தொழிலாக செய்து செய்து செத்துப்போன உன் செவிகளுக்குகேட்கலையோ கத்திக் கதறிய என் முத்துக்குமரன் ஒலி!

பௌத்த நெறிபடித்து, சிங்கள வெறிபிடித்து, தமிழன் உயிர்குடித்து, தோள்கள்திணவெடுத்து, பெண்கள் முலையறுத்து, தமிழன் இனமழிக்க துடிக்கின்றான்சிங்களவன் அங்கே!

தெய்வக்குறள் படித்து, பதவி வெறிபிடித்து, சூது மிக வளர்த்து, ஊதி உடல்பெருத்து, பாதித் தமிழகத்தை, பரம்பரைக்கு எழுதிவிட தவிக்கின்றான்எங்களவன் இங்கே!

இத்தாலி எருமைக்கு தப்பாது தாளமிடும்சப்பாணிக் கழுதையே - இனி
எப்போதும் மறவாது தமிழினம் - உனைஎப்போதும் மறவாது தமிழினம்!
தமிழினம் அழிகிறது! தமிழகம் அழுகிறது!தலைவன் நீ என்ன செய்தாய்!

தனி அறையில் ஓய்வெடுத்து, திறம்பட நீ நடித்து,
முதுமையிலும் இளமைகண்டாய்!
எங்கள் முதுகெலும்பை ஏன் உடைத்தாய்!

பொட்டென்று விழுந்தவன் பொசுக்கென்று போய்விடுவான்
சட்டென்று தமிழகம் விழித்தெழும் என்றிருக்க!
எட்டிப்பிடித்த சனி விட்டுத்தொலையாதெனும் வெட்டிப் பழமொழிக்கு சான்றாகவந்துவிட்டாய்குலத்தைக் கெடுக்க வந்த கோடாரிக் காம்பே!

உன் சிரத்தை அரிந்துவரச்சொன்னான் ஒரு வடவன்
சினந்து எழுந்தோம் தமிழ்த்தலைவன் நீ என்று
இன்றுஉணர்ந்து கொண்டோம் அது மிகப்பெரிய தவறென்று!


தமிழைக்கொண்டே தமிழனை அழித்து விட்டாய்! - இனி உன் மந்திரத் தமிழ் நடைமயக்காது எங்களை உன் உதட்டோர புன்னகையை உண்மையென நம்பினோம்
ஒட்டுமொத்ததமிழரின் புதைக்குழி என்றறியாமல்!

இசைபாடும் புலவன் இன்று வசை பாட வந்ததேன் அசையாத கல் மனது அசைந்திடும்என்பதாலா? இல்லை கடுப்பேறி குமைந்திருக்கும் என் போன்ற இதயங்கள் இளைப்பாற ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்திடவே!


தமிழனை குறைவாக எடைபோட்டாய்!தமிழனுக்கு எதிராக தடை போட்டாய்!முடிந்தது உன் ஆட்சி! மடிந்தது உன் சூழ்ச்சி!அரசியல் பிழைத்தோர்க்கு அறமே கூற்றெனும் நீதியும் நிலைக்கட்டும்!அடிவயிறு எரிகின்ற அன்னையரின் வெப்பம் உனை அப்படியே பொசுக்கட்டும்!


ஆதித்தமிழினம் அகிலத்தை ஆளும்!அடிமை விலங்குகள் துகள்களாய் உடையும்!
அன்னியன் ஆதிக்கம் அடியோடு ஒழியும்!அன்பெனும் ஒரு குடையுள் அகிலமே திரளும்!சுதந்திரக்காற்று பரவட்டும் எங்கனும் சுதந்திரக்காற்று பரவட்டும் எங்கனும் - இது சத்தியம்! சத்தியம்! சத்தியம்!

புதன், 4 மார்ச், 2009

ராப்பிச்சை

*இந்தாப்பா ராப்பிச்சை.. ரெண்டு நாளா வீட்டுக்காரர் ஊர்லே இல்ல. ரசம்தான் வச்சேன்.. வாங்கிட்டு போறியா..?


மவராசன் சமைச்சது இல்லியா.. சரி போடு தாயி.. போற உசுரு எப்படிப் போனா என்ன..?*

ஸ்பின் பௌலர்

ஸ்பின் பெளலருக்கு பெண் குழந்தை பிறந்தால் என்ன பெயர் வைப்பார்?

பால திருப்புற சுந்தரி

யார் காப்பாற்றப்படுவது

சோ, லல்லு பிரசாத் யாதவ், சுப்ரமணிய சாமி இவர்களை வீரப்பன் கொண்டு போனால் யார் காப்பற்றபடுவார்கள்?

இந்த நாடு காப்பாற்றப்படும்.

மூன்றாம் உலகப் போர்

ஆசிரியர் : மூன்றாம் உலகப் போர் வந்தால் என்ன ஆகும் ?

மாணவி : (சோகமாக) வரலாறில் இன்னும் நிறைய படிக்க வேண்டி இருக்கும்!

குழப்பம்

ஒரே குழப்பமா இருக்குடி..

எதுக்கு..?

குடும்பக் கட்டுப்பாடு செஞ்சுகிட்டா 500 ரூபாயாம்.. கர்ப்பிணி உதவித் தொகை 5000 ரூபாயாம்.. ரெண்டையும் எப்படி வாங்குறதுன்னுதான்..!

காலுக்கு செருப்பு

என் காலுக்கு செருப்பில்லை என வேதனைப்பட்டேன் - காலே இல்லாத மனிதனைப் பார்க்கும் வரை.

- சீனப்பழமொழி .

திங்கள், 2 மார்ச், 2009

நேர்காணல் (இன்டெர்வியூ)

நீங்கள் ஏன் எங்கள் நிறுவனத்தில் பணிபுரிய விரும்புகிறீர்கள்..?

எந்தப் புண்ணாக்குக் கம்பெனியிலாவது வேலை செஞ்சாதான் பொழப்ப ஓட்ட முடியும் .. எந்த நாய் வேலை குடுக்குதோ அங்க வேலை செய்ய வேண்டியதுதான்..அதைத்தவிர உன்கம்பேனி மேல பெருசா ஒண்ணும் மதிப்பு மரியாதை யெல்லாம் இல்லே ..!

உங்களுக்கு ஏன் இந்த வேலையைத் தரவேண்டும்..?

உன் கம்பெனி வேலையை யாராவது ஒருத்தன் செஞ்சுதானேஆகணு ம் .. என்கிட்டதான் கொடுத்துப் பாரேன்.

உங்களுடைய தனித்திறமை என்ன..?

வேலைக்கு சேர்ந்ததும், கடலை போட வழியிருக்கான்னு பார்ப்பேன் .. இங்கேருந்து என்னென்ன சுடலாம்ன்னு நோட்டம் உடுவேன்..உன் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்ததைச் சொல்லி ஊர் பூரா கடன் வாங்குவேன்.. அப்புறம் வேற கம்பெனிக்கு தாவ முயற்சி பண்ணுவேன் .. இதைத்தவிர உன் கம்பெனிக்கு சேவை செஞ்சு முன்னுக்குக் கொண்டு வரணும்ங்கிற மூட நம்பிக்கையெல்லாம் கிடையாது .

உங்கள் மிகப்பெரியபலம்..?

இதைவிட பெரிய சம்பளத்தில் வேலை கிடைச்சா அப்படியே உட்டுட்டு அங்கே ஓடிருவேன்..மனசாட்சி, நன்றியுணர்வு இதுக்கெல்லாம் முட்டாள்தனமா ,,இடமே கொடுக்காம கடுமையா நடந்துக்குவேன்..

பலவீனம் ..?

ஹி.. ஹி .. பெண்கள்..!

இதற்குமுன் வேலை பார்த்த நிறுவனத்தில் உங்கள் சாதனைகள் என்ன..?

அப்படி ஏதும் இருந்தா நான் ஏன் வேலை தேடி இங்கே வருகிறேன் .. அந்த சாதனைகளை பெருசா பில்டப்பண்ணி அங்கேயே வேணும்ங்கிற அளவுக்கு சம்பளத்தைக் கறந்துருக்க மாட்டேனா ..?

நீங்கள் சந்தித்த மிகப் பெரும் சவால் என்ன ..? அதை எப்படி வெற்றி கொண்டீர்கள்..?

ஆண்டவன் அருள்தான் காரணம் .. இதுவரைக்கும் எந்த நிர்வாகியும் மூணாவது மாசச் சம்பளத்தைக் கொடுக்கறதுக்கு முன்னே நான் ஒரு வெத்துவேட்டுன்னு கண்டுபிடிச்சதே இல்லே.

ஏன் இதற்கு முன் பார்த்த வேலையை விட்டு விட்டீர்கள்..?

நீங்கள் ஏன் இந்த வேலைக்கு நேர்காணல் நடத்த வேண்டிய அவசியம் வந்ததோ .. அதே காரணத்துக்காகத்தான்..!

இந்த பதவியில் நீங்கள் எதிர்பார்க்கும் அம்சங்கள் என்ன..?

நல்ல சம்பளம், 0 % வேலை,பக்கத்து சீட்டுல கண்ணுக்கு குளிர்ச்சியா ஒரு பெண் , நாட்டாமை பண்ண எனக்குக் கீழே ஒருகூட்டம் . அது போதும்.

ஹார்ட் அட்டாக்

பெண்: "ஹார்ட் அட்டாக் வந்தா என்ன முதலுதவி செய்யணும் டாக்டர்?"

டாக்டர்: "எதுக்கும்மா கேக்கறீங்க?"

பெண்: "பட்டுச்சேலை வாங்கின பில்லை என் புருஷன் கிட்ட காட்ட வேண்டிருக்கு."

கடவுள் எங்கே

ஓர் ஊருக்கு புதிய மனிதன் ஒருவன் வந்தான்.

‘‘எங்கே இருந்து வருகிறாய்? என்று கேட்டார்கள்.

‘‘தேவலோகத்திலிருந்து வருகிறேன் என்றான். கேட்டவர்கள் சிரித்தார்கள்.

‘‘உன்னை யார் இங்கே அனுப்பி வைத்தது?

‘‘கடவுள்தான் அனுப்பி வைத்தார்.

கேட்டவர்களுக்கு மேலும் சிரிப்பு.புத்தி சரியில்லாதவன் என்பதாகப் புரிந்து கொண்டு அவனை கோயிலுக்குக் கூட்டிச் சென்றார்கள். மனநலம் பாதிக்கப்பட்டவர்களைத் தெளிய வைக்கிற கோயில் அது. அங்கே இருந்த கல் மண்டபத் தூணில் இவனைக் கட்டிப் போட்டு விட்டார்கள்.இப்போது அவன் சிரித்தான்.

‘‘ஏன் சிரிக்கிறாய்?

‘‘என்னை அனுப்பி வைக்கிறபோது கடவுளே சொன்னார், இப்படி எல்லாம் நடக்கும் என்று!‘‘எப்படி எல்லாம் நடக்கும் என்று?‘‘உன்னைக் கட்டிப் போடுவார்கள்... கைகொட்டிச் சிரிப்பார்கள் என்று சொன்னார் கடவுள். அவர் சொன்னபடியே நடக்கிறது. ஆகவே, நான் அவருடைய தூதன் என்பதற்கு இதைவிட வேறு என்ன நிரூபணம் வேண்டும்?

மக்கள் யோசித்தார்கள்.

‘‘சரி. நீ என்னதான் சொல்ல வருகிறாய்?‘‘நம்புங்கள்... நான் ஒரு தீர்க்கதரிசி. கடவுளால் இங்கே அனுப்பப் பட்டவன். உங்களுக்கு வழிகாட்டவே இங்கே வந்திருக்கிறேன்.இப்போது இன்னொரு சிரிப்புச் சத்தம். இவனைவிட பலமாகச் சிரிப்பது கேட்டது. அந்தச் சத்தம் எங்கே இருந்து வருகிறது? அவனுக்குப் பின்னால், அதே மண்டபத்தில்! அங்கே இன்னொரு மனிதன் தூணில் கட்டப்பட்டிருக்கிறான்.

‘‘நீ ஏன் சிரிக்கிறாய்?

‘‘நீ பொய் சொல்கிறாய்... அதனால் சிரிக்கிறேன்!

‘‘எது பொய் என்கிறாய்?

‘‘கடவுள் உன்னை அனுப்பி வைத்ததாகச் சொல்வது பொய்!

‘‘அது எப்படி உனக்குத் தெரியும்?

‘‘நான் உன்னை அனுப்பி வைக்கவே இல்லையே!

இவன் அதிர்ச்சியோடு அவனை நிமிர்ந்து பார்த்தான்.அவன் சொன்னான் பரிதாபமாக... ‘‘நான்தான் கடவுள் என்று சொல்லிக் கொண்டு இங்கே வந்தவன். ஒரு மாதமாகக் கட்டிப் போட்டு வைத்திருக்கிறார்கள்.

நண்பர்களே!நானே கடவுளின் தூதன் என்கிறார்கள் சிலர்.நானே கடவுள் என்கிறார்கள் சிலர்.உண்மையான கடவுள் எங்கேதான் இருக்கிறார்?

ஒரு மனிதன், ஞானி ஒருவரைத் தேடிப் போனான். ‘‘நான் கடவுளைச் சந்திக்க வேண்டும்! என்றான்.அவர் ‘பளார் என்று இவன் கன்னத்தில் அறைந்து விட்டார்.இவன் பயந்து ஓடிப் போனான்.பக்கத்திலிருந்தவர்கள் ஞானியிடம் கேட்டார்கள்: ‘‘அவனை ஏன் அறைந்தீர்கள்?

‘‘அவன் ஒரு பைத்தியக்காரன்!

‘‘அப்படியா?‘‘

ஆமாம்! அவனையே அவன் தேடிக் கொண்டிருக்கிறான்!

வியாழன், 26 பிப்ரவரி, 2009

தொண்ணூறு வயதில் கல்யாணம்

ஒரு ஊருல தொண்ணூறு வயசு பெரியவரு ஒருத்தரு இருந்தாரு. அவரு ஒருநாள் குடும்ப டாக்டர்க்கிட்ட போய் நான் ஒரு கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு இருக்கேன், என்ன சொல்றீங்கன்னு கேட்டாரு. அதுக்கு டாக்டரு அதெல்லாம் வேலைக்காவது எதுக்கு ரிஸ்க்ன்னு சொல்லிட்டாரு. ஆனா இவரு கேக்கலை. இருபத்தியெட்டு வயசு பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டாரு.
நாலு மாசம் கழிச்சு திரும்ப டாக்டர பாக்க வந்தாரு… என்னமோ வேலைக்காவது சொன்னீங்களே, என் சம்சாரம் இப்ப மூணு மாசம்னு பெருமையா சொன்னாரு.

அதுக்கு டாக்டரு நான் ஒரு கதை சொல்றேன் கேளுங்கன்னு சொல்லி நான் ஒரு தடவை ஆப்பிரிக்க காட்டுக்கு போனப்ப ஒரு சிங்கம் என் எதிர்க்க வந்துச்சி. பயங்கரமா உறுமிச்சி. எனக்கு வேற வழி இல்ல. நான் உடனே என் கையில் இருந்த குடையால அந்த சிங்கத்தை சுட்டேன். அந்த சிங்கம் குண்டு பாய்ஞ்சி செத்துப் போச்சு என கதையை முடிந்தார்.
உடனே அந்த பெருசு அது எப்படி குடையில இருந்து குண்டு வரும்? பின்னாடி இருந்து யாராவது துப்பாக்கியால சுட்டுருப்பாங்கன்னு சொன்னாரு. அதுக்கு டாக்டரு உங்க விஷயத்திலயும் அதான் நடந்துருக்குதுன்னு சொன்னாரு.

ஞாயிறு, 22 பிப்ரவரி, 2009

எட்டுப்பட்டிக்கும் சொந்தக்காரன்

'எட்டுப்பட்டிக்கும் சொந்தக்கார‎ன்'னு சொ‎ன்னத நம்பி பொண்ணக் கொடுத்தது தப்பாப் போச்சு""

ஏ‎ன்.. என்னாச்சு?""

அவ‎ன் கேரளாக்கார‎ன். அங்கே 'பட்டி'‎ன்னா நாயாமே!!"

யார் இருப்பது

மனைவி: இந்த வீட்ல ஒண்ணு நான் இருக்கணும் இல்ல உங்க அம்மா இருக்கணும்!

கணவன்: வேலைக்காரிய மட்டும் விட்டுட்டு நீங்க ரெண்டு பேரும் எங்கேயாவது போய்த் தொலைங்க.

செவ்வாய், 17 பிப்ரவரி, 2009

விதியை மதியால் வெல்ல முடியுமா?

வியாச முனிவரிடம் ஒரு சிஷ்யன் இருந்தான். அவன் அவருக்கு வேண்டிய பணிவிடைகளை செவ்வனே செய்து வந்தான். அவனது பணிவிடைகளால் வியாசரும் மிகவும் மகிழ்ந்து போனார்.

ஒரு நாள் ஆசிரமத்திற்குத் தேவையான விறகுகளைச் சேகரிப்பதற்காக அந்த சீடன் காட்டிற்குள் சென்ற போது ஒரு முனிவரை சந்திக்கிறான். முக்காலமும் அறிந்த முனிவரான அவர், அவனை முன்னே செல்ல விட்டு 'இவன் எவ்வளவு பணிவிடைகள் செய்தாலும் அவனது குருவினாலேயே (வியாசர்) அவனுக்கு மரணம் ஏற்பட வேண்டுமென்பது விதி என்று கூறிச் செல்கிறார்.


அதைக் கேட்டுவிட்ட அந்த சீடனுக்கு அன்றிலிருந்து மனசே சரி இல்லாமல் முக வாட்டத்துடனேயே திரிந்தான் . ஆனால் அவன் குருவிற்கு செய்ய வேண்டியவைகளை எப்போதும் போல செய்து வந்தான். அவனது முகவாட்டத்தைக் கண்ட வியாசர் அவனிடம் அதற்கான காரணத்தை வினவினார். முதலில் கூற மறுத்த சீடன் பிறகு குருவின் கட்டளையின் பேரில் காட்டில் நடந்தவைகளைக் கூறினான்.

அதைக்கேட்டு விட்டு பலமாகச் சிரித்த வியாசர், இதற்காகவா இவ்வளவு வருத்தம், நீ ஒன்றும் கவலைப்படாதே , நான் அந்த விதியை மாற்றிக் காட்டுகிறேன் என்று கூறி அவனை சமாதனம் செய்தார். பிறகு நேராக எமலோகம் சென்று எமதர்மனிடம் ஆயுள் நிர்ணயம் செய்து வைக்கும் சுவடியைக் கேட்டார். அவனும் மறுக்காமல் சுவடியை சித்திரகுப்தனிடம் இருந்து எடுத்துக் கொடுக்க அதில் உள்ள பக்கங்களை ஒவ்வொன்றாக புரட்டிப் பார்க்க, அவர் சீடனின் பக்கம் வந்ததும் அதில் உள்ளவைகளைப் படித்தார். அதில் பின்வருமாறு எழுதி இருந்தது,

" என்றைக்கு வியாச முனிவரானவர் பூலோகத்தில் இருந்து எமலோகம் வந்து எமதர்மனிடம் சுவடியை வாங்கி இந்தப் பக்கத்தை புரட்டிப் பார்க்கிறாரோ , அன்று இவனுக்கு மரணம் சம்பவிக்கும்"

(நடக்க இருப்பதை ஒரு போதும் தடுத்து விட முடியாது.)
- இரா. முத்துப்பாண்டியன்.

திங்கள், 16 பிப்ரவரி, 2009

அதிசயமான நாடு

எழுநூற்று ஐம்பத்தொன்று சதுர கிலோமீட்டர் பரப்பளவை கொண்ட சிறிய நாடு டொமினிகா. இருபதாயிரம் மக்கள் தொகை கொண்ட இந்த நாட்டில் ஒரே ஒரு தியேட்டர் மட்டுமே உள்ளது. இங்கு டி.வி க்களே இல்லை என்பது கூடுதல் அதிசயம்.

(பின்குறிப்பு : அங்கு இலவச டிவி திட்டம் ஏதும் இல்லை போலும்)