பத்திரிக்கைச் செய்தி : காவிரி நதிநீர் வாங்கித்தர வக்கில்லாத வேசி மக்கள் - சீமான்
இது போல் இவர் பேசியிருப்பது சரியா இல்லை தவறா? என்பதை அறிவதை விடுத்து, சற்றே நோக்கினால் அவரது உள்ளக் குமுறல் தெளிவாக விளங்கும்.
சிலர் அவரை இலங்கைக்குச் சென்று போராடச் சொல்லுங்கள் என்று சொல்கிறார்கள்.
பக்கத்து வீட்டுக்காரன்தானே செத்தால் சாகிறான் என்று பார்த்துக்கொண்டு இருக்கும் நம் மக்களுக்கு பக்கத்து நாட்டுக்காரன் எப்படிப் போனால் என்ன என்கின்ற மனோபாவம் இருக்கும் வரை இது போன்ற பிரச்சனைகளுக்கு எளிதில் தீர்வு கிடைக்க வாய்ப்பில்லை என்பதே உண்மை.
தமிழகத்தின் தலைநகரில் ஒரு சம்பவம் என்றால் அதற்கான ஆதரவையோ அல்லது எதிர்ப்பையோ காட்ட வேண்டுமென்றால் தலைநகருக்குதான் செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை.
காவிரி நதியாக இருந்தாலும், காதலாக இருந்தாலும், ஜாதியோ, மதமோ அல்லது வேறெந்த சமூகப் பிரச்சனையாயினும் திரைப்படங்களில் வெற்றி அடைவதில் தான் தமிழனுக்கு சந்தோசம், மனநிறைவு எல்லாமும். கனவிலும் கற்பனையிலும் மனநிறைவு அடைவதில் தமிழனுக்கு நிகர் அவனேதான்.
இலங்கைத் தமிழர் பிரச்சனையை மையமாக வைத்து, அறப்போராட்டமோ அல்லது ஆயுதப்போரட்டமோ நடத்துவதை மையக் கருவாக வைத்து, தமிழன் வெற்றி பெற்று ஆட்சி அதிகாரமோ அல்லது தனி நாடோ கிடைப்பதாக படம் முடிவுற்றால், அப்படம் நம்மூரில் பல வெள்ளி விழாக்களைக் காணும்.
சீமான் பேசிய பேச்சுக்களில் இவ்வளவு கடுமையான வார்த்தைகளைப் பிரயோகித்ததில் எனக்கும் உடன்பாடு இல்லைதான். ஆனாலும் அவரது குமுறல் நன்கு வெளிப்பட்டு இருக்கிறது. இனி வரும் காலங்களில் இது போன்ற கடுமையான பேச்சுகளை அவர் தவிர்க்க வேண்டும் என்பதே என்னைப் போன்றோரின் வேண்டுகோள் . அதுவே நமது ஆசையும் கூட.
இரா. முத்துப்பாண்டியன்
சுய சிந்தனைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 14 பிப்ரவரி, 2009
வியாழன், 12 பிப்ரவரி, 2009
இராமலிங்க ராஜூவும் ஐந்து வயது சிறுமியும்
பத்திரிக்கை செய்திகள்
ஒன்று - ரூபாய் இருநூற்று முப்பது திருடிய சிறுமிக்கு அடி உதை.
இரண்டு - ரூபாய் எட்டாயிரம் கோடி மோசடி செய்த இராமலிங்க ராஜூவுக்கு சிறை விதிகளின் படி சலுகைகள்.
சட்டத்தின் முன் அனைவரும் சமமா? இந்த இரண்டு நிகழ்வுகளையும் பார்த்தால் மேற்கண்ட கேள்வி அனைவர் மனதிலும் எழும்.
முதலாவதாக அந்த சிறுமி திருடியது ரூபாய் இருநூற்று முப்பது. அவளுக்கு கிடைத்த தண்டனை சிறுமி என்றும் பாராமல் சில மோசமான காவலர்களால் தாக்கப்பட்டது. காவலர்களே உங்கள் வீரத்தை ஒரு சிறுமியிடம் தான் காட்ட வேண்டுமா? ஐந்து வயது என்பது அறியாத வயதுதானே? நாம்தானே தவறென்றால் தவறென்று சுட்டிக்காட்டி அறிவுறுத்த வேண்டும். அடிப்பது எந்த விதத்தில் நியாயம்?
இரண்டாவது இராமலிங்க ராஜூ மோசடி செய்தது ரூபாய் எட்டாயிரம் கோடி. அவருக்கு நீதிமன்ற விதிகளின் படி (என்ன விதியோ) அவருக்கென தனியான சொகுசு குளுகுளு அறை, கட்டில், மெத்தை, தொலைக்காட்சி , வீட்டுச் சாப்பாடு மற்றும் இன்ன பிற வசதிகள். அவருக்கு இது போன்ற வசதிகள் செய்து கொடுப்பதை நிறுத்த வேண்டும் என்பதோ, சிறுமியின் திருட்டையும், அதேபோல் லஞ்சம் வாங்கியோ, அல்லது திருடியோ , வேறுபல குற்றங்களுக்காக தண்டனை பெறுகின்ற குற்றவாளிகளின் குற்றங்களை நியாயப்படுத்த வேண்டும் என்பதோ இந்த கட்டுரையின் நோக்கமல்ல.
மாறாக அரசியல் சட்டம் என்பது அனைவருக்காகவும், சட்டத்தின் முன் அனைவரும் சரிசமம் என்பதற்காகவும் உருவாக்கப்பட்டது தானே ஒழிய ஏற்றத்தாழ்வுகளுடன் இருப்பதற்காக அல்ல என்பதை நினைவு கூறுவதற்காகவே.
இது போன்ற சம்பவங்களை பார்ப்பவர்கள் மத்தியில் எந்த ஒரு குற்றமாயினும் சிறிய அளவிலே இல்லாமல் பெரிய அளவிலே செய்தால் தண்டனை குறைவாக அல்லது சிறிய அளவில் தன்டனையுடன் சகல வசதிகளும் கிடைக்கும் (முக்கியமாக சில அரசியல்வாதிகள்) என்றதொரு தோற்றத்தை ஏற்படுத்தி விடாதா? தவறான முன்னுதாரணம் வேறு ஆகி விடுமே.
மதி கொண்ட மனிதனால் இயற்றப்பட்ட விதி(கள்) ஏன் சில நேரங்களில் சிலருக்கு ஒற்றைத் தராசாகவே நிற்கிறது.
- இந்திய அரசியல் சட்ட திட்டங்களுக்கும், இறையாண்மைக்கும் கட்டுப்பட்ட இந்திய தமிழன்.

புதன், 4 பிப்ரவரி, 2009
அண்ணன் சாக மாட்டார் . திண்ணையும் காலியாகாது
அண்ணன் சாக மாட்டார் . திண்ணையும் காலியாகாது - முதல்வர் பேச்சு .
என்ன ஒரு அருமையான எடுத்துக்காட்டு. தலைவர் திரு. கலைஞர் அவர்கள் இப்போது கூட இலங்கை தமிழர்களைப் பற்றி பேசுவார் என்று நாம் நினைத்தால் அது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பதை மீண்டும் ஒரு முறை நமக்குத் தெளிவுபடுத்தி இருக்கிறார். அவருக்கு அவரது திண்ணை மீது எவ்வளவு மோகம் இருக்கிறது என்பதும் இதன் மூலம் தெளிவாகிறது. தமிழினத் தலைவன் என்பது தமிழ் வருடப்பிறப்பை சித்திரையில் இருந்து தை மாதத்திற்கு மாற்றுவதும், பொங்கலன்று இலவச அரிசி வழங்குவதோடு நிறுத்திக் கொள்வதும் தான் போலும்.
சில தினங்களுக்கு முன்பு முத்துக்குமார் என்பவர் இறந்ததை அரசியலாக்கக் கூடாது என்றவர் இப்பொழுது திண்ணையைப் பற்றி பேசுவது வேடிக்கைதான். பதவிக்கு மற்றும் அரசுக்கு எந்தப் பிரச்னையும் வராமல் இலங்கைப் பிரச்சனையில் ஒரு தீர்வு காண வழி கிடைக்குமென்றால் யாராவது கலைஞருக்கு சொல்லுங்கள்.
நண்பர் ஒருவர் வேடிக்கையாக "இராமாயணத்தில் ஒரு கூனி, மகாபாரதத்தில் ஒரு சகுனி, தமிழனுக்கு ஒரு கருணாநிதி" என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
நாம் என்ன நினைப்பது ?

ஞாயிறு, 1 பிப்ரவரி, 2009
கல்லூரிகள் மற்றும் அதைச் சார்ந்த தங்கும் விடுதிகளுக்கு காலவரையற்ற விடுமுறை
பத்திரிக்கைச் செய்தி : கல்லூரிகள் மற்றும் அதைச் சார்ந்த தங்கும் விடுதிகளுக்கு காலவரையற்ற விடுமுறை.
தற்போது தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கும் இலங்கை தமிழர்களுக்கான போராட்டம் மேலும் மேலும் வலுவடைந்து விடக்கூடாது என்பதில் அரசு தீவிரமாக உள்ளது இதன் மூலம் தெரிகிறது. திரு. ஜெயலலிதா அவர்களும், தமிழக மற்றும் தேசிய காங்கிரசும் அவரவர் நிலைபாட்டினை தெளிவாக பலமுறை தெளிவுபடுத்தி விட்டனர்.
ஆனால் நமது முதல்வரின் நிலைப்பாடு என்ன என்பதுதான் என்னைப்போன்ற சாமானியனுக்கு இன்னும் விளங்கவில்லை. உண்மையிலே அது ஒரு புரியாத புதிர்தான்.
ஒரு வேளை இந்நேரம் தி மு க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் எதிர்க்கட்சியாக இருந்து இருந்தால் இந்தப் போராட்டத்தை அவைகளே முன்நின்று இன்னும் பெரிய அளவிலே நடத்தி இருக்கக் கூடும்.
இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ ? பொறுத்திருந்து பார்ப்போம்.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)