Earn Money - பணம் சம்பாதிக்க

சனி, 14 பிப்ரவரி, 2009

காவிரி நதிநீர் வாங்கித்தர வக்கில்லாத வேசி மக்கள் - சீமான்

பத்திரிக்கைச் செய்தி : காவிரி நதிநீர் வாங்கித்தர வக்கில்லாத வேசி மக்கள் - சீமான்

இது போல் இவர் பேசியிருப்பது சரியா இல்லை தவறா? என்பதை அறிவதை விடுத்து, சற்றே நோக்கினால் அவரது உள்ளக் குமுறல் தெளிவாக விளங்கும்.
சிலர் அவரை இலங்கைக்குச் சென்று போராடச் சொல்லுங்கள் என்று சொல்கிறார்கள்.

பக்கத்து வீட்டுக்காரன்தானே செத்தால் சாகிறான் என்று பார்த்துக்கொண்டு இருக்கும் நம் மக்களுக்கு பக்கத்து நாட்டுக்காரன் எப்படிப் போனால் என்ன என்கின்ற மனோபாவம் இருக்கும் வரை இது போன்ற பிரச்சனைகளுக்கு எளிதில் தீர்வு கிடைக்க வாய்ப்பில்லை என்பதே உண்மை.

தமிழகத்தின் தலைநகரில் ஒரு சம்பவம் என்றால் அதற்கான ஆதரவையோ அல்லது எதிர்ப்பையோ காட்ட வேண்டுமென்றால் தலைநகருக்குதான் செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை.

காவிரி நதியாக இருந்தாலும், காதலாக இருந்தாலும், ஜாதியோ, மதமோ அல்லது வேறெந்த சமூகப் பிரச்சனையாயினும் திரைப்படங்களில் வெற்றி அடைவதில் தான் தமிழனுக்கு சந்தோசம், மனநிறைவு எல்லாமும். கனவிலும் கற்பனையிலும் மனநிறைவு அடைவதில் தமிழனுக்கு நிகர் அவனேதான்.

இலங்கைத் தமிழர் பிரச்சனையை மையமாக வைத்து, அறப்போராட்டமோ அல்லது ஆயுதப்போரட்டமோ நடத்துவதை மையக் கருவாக வைத்து, தமிழன் வெற்றி பெற்று ஆட்சி அதிகாரமோ அல்லது தனி நாடோ கிடைப்பதாக படம் முடிவுற்றால், அப்படம் நம்மூரில் பல வெள்ளி விழாக்களைக் காணும்.

சீமான் பேசிய பேச்சுக்களில் இவ்வளவு கடுமையான வார்த்தைகளைப் பிரயோகித்ததில் எனக்கும் உடன்பாடு இல்லைதான். ஆனாலும் அவரது குமுறல் நன்கு வெளிப்பட்டு இருக்கிறது. இனி வரும் காலங்களில் இது போன்ற கடுமையான பேச்சுகளை அவர் தவிர்க்க வேண்டும் என்பதே என்னைப் போன்றோரின் வேண்டுகோள் . அதுவே நமது ஆசையும் கூட.

இரா. முத்துப்பாண்டியன்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக