ஒரு ஊரிலே ஒரு ஏழை வியாபாரி இருந்தான். அவன் 500 கிராம் எடையுள்ள ரொட்டி விற்று வந்தான்.தினமும் அரிசி விற்கும் ஒரு தொழிலாளி இந்த ஏழை வியாபாரியிடத்திலேயே நித்தமும் ரொட்டி வாங்கி சாப்பிட்டு வந்தார்.ஒரு நாள் இந்த அரிசி முதலாளிக்கு ( தொழிலாளி) வாங்கி வந்த ரொட்டியின் மீது சந்தேகம் வந்தது. உடனே அதனை படிக்கல்லு போட்டு நிறுத்தார்.அப்போது அந்த ரொட்டி 450 கிராம் மட்டுமே இருப்பதாகக் காட்டியது. உடனே இவருக்கு சரியான கோபம். தன்னை ஏமாற்றி விட்டதாக அந்த ஏழைமீது வழக்குப் போட்டார்.வழக்கும் நடைபெற்றது. அப்போது நீதிபதி முன்னிலையில் அந்த ஏழை அந்த ரொட்டி தான் விற்ற ரொட்டி என்றும்....450 கிராம் இருப்பதை தான் ஏற்கிறேன் என்றும் கூறினான்.இதனை ஏன் இப்படி செய்தாய் என்று நீதிபதி கேட்டார்.அதற்கு அவன்...மிகவும் தாழ்மையாக ஐயா...நான் வீட்டிற்கு கொண்டு செல்ல தினமும் இவர் கடையில்தான் 500 கிராம் அரிசி வாங்குவேன். என்னுடைய படிகல் தேய்ந்துவிட்டபடியால்.. இவரிடம் வாங்கிய 500 கிராம் அரிசியை வைத்தே இதுநாள் வரையில் வியாபாரம் செய்துவந்தேன்.இப்போது மனம் வேதனையடைகிறேன்....இந்த முதலாளியின் கடையில் வேண்டிய அரிசியின் நிறுவையை நம்பி பல மக்களுக்கு 50 கிராம் குறைவாக ரொட்டிகளை விற்றுவிட்டேன் என்று..உடனே அந்த அரிசிக்கடை முதலாளியின் அரிசிகளை நிறுத்துப்பார்தால் எல்லாப்பொதிகளுமே 450 கிராமாகவே காணப்பட்டது.
பார்த்தீர்களா இதில் யார் மோசக்காறர்கள்..? என்று..?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக