அண்ணன் சாக மாட்டார் . திண்ணையும் காலியாகாது - முதல்வர் பேச்சு .
என்ன ஒரு அருமையான எடுத்துக்காட்டு. தலைவர் திரு. கலைஞர் அவர்கள் இப்போது கூட இலங்கை தமிழர்களைப் பற்றி பேசுவார் என்று நாம் நினைத்தால் அது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பதை மீண்டும் ஒரு முறை நமக்குத் தெளிவுபடுத்தி இருக்கிறார். அவருக்கு அவரது திண்ணை மீது எவ்வளவு மோகம் இருக்கிறது என்பதும் இதன் மூலம் தெளிவாகிறது. தமிழினத் தலைவன் என்பது தமிழ் வருடப்பிறப்பை சித்திரையில் இருந்து தை மாதத்திற்கு மாற்றுவதும், பொங்கலன்று இலவச அரிசி வழங்குவதோடு நிறுத்திக் கொள்வதும் தான் போலும்.
சில தினங்களுக்கு முன்பு முத்துக்குமார் என்பவர் இறந்ததை அரசியலாக்கக் கூடாது என்றவர் இப்பொழுது திண்ணையைப் பற்றி பேசுவது வேடிக்கைதான். பதவிக்கு மற்றும் அரசுக்கு எந்தப் பிரச்னையும் வராமல் இலங்கைப் பிரச்சனையில் ஒரு தீர்வு காண வழி கிடைக்குமென்றால் யாராவது கலைஞருக்கு சொல்லுங்கள்.
நண்பர் ஒருவர் வேடிக்கையாக "இராமாயணத்தில் ஒரு கூனி, மகாபாரதத்தில் ஒரு சகுனி, தமிழனுக்கு ஒரு கருணாநிதி" என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
நாம் என்ன நினைப்பது ?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக