Earn Money - பணம் சம்பாதிக்க

சனி, 31 ஜனவரி, 2009

நபிகள்

ஒரு மனிதன் தன்னுடைய நாவைக் காத்துக் கொண்டால் அல்லா அவனுடைய மானத்தைக் காத்துக் கொடுப்பான். இறை வணக்கம் செய்வதற்கு சிரமப்பட வேண்டும். ஆனால் சிரமமில்லாத ஒரு வணக்கம் உண்டு என்றால் அது மவுனம்தான்.
பேசுவது வெள்ளி என்றால் பேசாமலிருப்பது தங்கமாகும்.
தேவைக்குப் போக மீதிப் பணம் வைத்திருப்பவர் தர்மம் செய்யத் தயங்குகிறார், சேர்த்து வைக்கிறார். ஆனால் தேவையில்லாத பேச்சுக்களுக்கு அவர் முக்கியத்துவம் கொடுக்கிறார்.
நாவை அடக்கி ஆளுங்கள். அதற்கு அதிகாரம் கொடுக்காதீர்கள். உங்கள் அதிகாரத்திற்கு கீழ் படிந்து அது இயங்கட்டும். இதில்தான் உங்கள் வெற்றி இருக்கிறது.
எனக்குப் பிறகு நான் பயப்படுவதெல்லாம் திறமை மிக்க நாவு படைத்த நயவஞ்சகரைப் பற்றியதே.
கெட்ட வார்த்தைகளைப் பேசுபவன் மீது அல்லா கோபமடைகிறான். அதிகமான பாவங்கள் நாவினால்தான் உண்டாகின்றன.
உன் நாவைப் பேணிக்கொள். நீ செய்த பாவங்களை எண்ணி எண்ணிக் கண்ணீர் சிந்து. போர்க்களத்தில் அல்லாவுக்காக உயிர்த் தியாகம் சிந்தும் செந்நீரை விட அல்லாவின் பயத்தினால் அழுபவரின் கண்ணீர் பெருமைக்குரியதாகும்.
எவர் அதிகமாக வீண் பேச்சு பேசுகிறாரோ அவர் ஏழ்மை நிலைமையை அடைவார்.
-நபிகள் நாயகம்.

1 கருத்து:

  1. taken from one news paper"THE SAME QUESTINE I HAVE" when we all going to follw instead of only talking.good gathering keep it up

    கேள்வி : மத நூல்கள் சொல்லுவதிலிருந்து மாற்றம் கூடாது என்று கூறும் அம்மதத்தின் பக்தர்கள், வாழ்க்கை முறையில் மதத்தில் கூறப்படும் விதிமுறைகள்படி வாழ்கிறார்களா?

    -மு.க. பாத்திமா பீவி, திண்டுக்கல்

    பதில் : சிக்கலான கேள்வி; சிந்தனையில் பொறி தட்டும் கேள் வியைக் கேட்டுவிட்டீர்களே, பாராட்டுகள்!
    answer given by Mr.veeramani

    பதிலளிநீக்கு