Earn Money - பணம் சம்பாதிக்க

வியாழன், 26 பிப்ரவரி, 2009

தொண்ணூறு வயதில் கல்யாணம்

ஒரு ஊருல தொண்ணூறு வயசு பெரியவரு ஒருத்தரு இருந்தாரு. அவரு ஒருநாள் குடும்ப டாக்டர்க்கிட்ட போய் நான் ஒரு கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு இருக்கேன், என்ன சொல்றீங்கன்னு கேட்டாரு. அதுக்கு டாக்டரு அதெல்லாம் வேலைக்காவது எதுக்கு ரிஸ்க்ன்னு சொல்லிட்டாரு. ஆனா இவரு கேக்கலை. இருபத்தியெட்டு வயசு பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டாரு.
நாலு மாசம் கழிச்சு திரும்ப டாக்டர பாக்க வந்தாரு… என்னமோ வேலைக்காவது சொன்னீங்களே, என் சம்சாரம் இப்ப மூணு மாசம்னு பெருமையா சொன்னாரு.

அதுக்கு டாக்டரு நான் ஒரு கதை சொல்றேன் கேளுங்கன்னு சொல்லி நான் ஒரு தடவை ஆப்பிரிக்க காட்டுக்கு போனப்ப ஒரு சிங்கம் என் எதிர்க்க வந்துச்சி. பயங்கரமா உறுமிச்சி. எனக்கு வேற வழி இல்ல. நான் உடனே என் கையில் இருந்த குடையால அந்த சிங்கத்தை சுட்டேன். அந்த சிங்கம் குண்டு பாய்ஞ்சி செத்துப் போச்சு என கதையை முடிந்தார்.
உடனே அந்த பெருசு அது எப்படி குடையில இருந்து குண்டு வரும்? பின்னாடி இருந்து யாராவது துப்பாக்கியால சுட்டுருப்பாங்கன்னு சொன்னாரு. அதுக்கு டாக்டரு உங்க விஷயத்திலயும் அதான் நடந்துருக்குதுன்னு சொன்னாரு.

ஞாயிறு, 22 பிப்ரவரி, 2009

எட்டுப்பட்டிக்கும் சொந்தக்காரன்

'எட்டுப்பட்டிக்கும் சொந்தக்கார‎ன்'னு சொ‎ன்னத நம்பி பொண்ணக் கொடுத்தது தப்பாப் போச்சு""

ஏ‎ன்.. என்னாச்சு?""

அவ‎ன் கேரளாக்கார‎ன். அங்கே 'பட்டி'‎ன்னா நாயாமே!!"

யார் இருப்பது

மனைவி: இந்த வீட்ல ஒண்ணு நான் இருக்கணும் இல்ல உங்க அம்மா இருக்கணும்!

கணவன்: வேலைக்காரிய மட்டும் விட்டுட்டு நீங்க ரெண்டு பேரும் எங்கேயாவது போய்த் தொலைங்க.

செவ்வாய், 17 பிப்ரவரி, 2009

விதியை மதியால் வெல்ல முடியுமா?

வியாச முனிவரிடம் ஒரு சிஷ்யன் இருந்தான். அவன் அவருக்கு வேண்டிய பணிவிடைகளை செவ்வனே செய்து வந்தான். அவனது பணிவிடைகளால் வியாசரும் மிகவும் மகிழ்ந்து போனார்.

ஒரு நாள் ஆசிரமத்திற்குத் தேவையான விறகுகளைச் சேகரிப்பதற்காக அந்த சீடன் காட்டிற்குள் சென்ற போது ஒரு முனிவரை சந்திக்கிறான். முக்காலமும் அறிந்த முனிவரான அவர், அவனை முன்னே செல்ல விட்டு 'இவன் எவ்வளவு பணிவிடைகள் செய்தாலும் அவனது குருவினாலேயே (வியாசர்) அவனுக்கு மரணம் ஏற்பட வேண்டுமென்பது விதி என்று கூறிச் செல்கிறார்.


அதைக் கேட்டுவிட்ட அந்த சீடனுக்கு அன்றிலிருந்து மனசே சரி இல்லாமல் முக வாட்டத்துடனேயே திரிந்தான் . ஆனால் அவன் குருவிற்கு செய்ய வேண்டியவைகளை எப்போதும் போல செய்து வந்தான். அவனது முகவாட்டத்தைக் கண்ட வியாசர் அவனிடம் அதற்கான காரணத்தை வினவினார். முதலில் கூற மறுத்த சீடன் பிறகு குருவின் கட்டளையின் பேரில் காட்டில் நடந்தவைகளைக் கூறினான்.

அதைக்கேட்டு விட்டு பலமாகச் சிரித்த வியாசர், இதற்காகவா இவ்வளவு வருத்தம், நீ ஒன்றும் கவலைப்படாதே , நான் அந்த விதியை மாற்றிக் காட்டுகிறேன் என்று கூறி அவனை சமாதனம் செய்தார். பிறகு நேராக எமலோகம் சென்று எமதர்மனிடம் ஆயுள் நிர்ணயம் செய்து வைக்கும் சுவடியைக் கேட்டார். அவனும் மறுக்காமல் சுவடியை சித்திரகுப்தனிடம் இருந்து எடுத்துக் கொடுக்க அதில் உள்ள பக்கங்களை ஒவ்வொன்றாக புரட்டிப் பார்க்க, அவர் சீடனின் பக்கம் வந்ததும் அதில் உள்ளவைகளைப் படித்தார். அதில் பின்வருமாறு எழுதி இருந்தது,

" என்றைக்கு வியாச முனிவரானவர் பூலோகத்தில் இருந்து எமலோகம் வந்து எமதர்மனிடம் சுவடியை வாங்கி இந்தப் பக்கத்தை புரட்டிப் பார்க்கிறாரோ , அன்று இவனுக்கு மரணம் சம்பவிக்கும்"

(நடக்க இருப்பதை ஒரு போதும் தடுத்து விட முடியாது.)
- இரா. முத்துப்பாண்டியன்.

திங்கள், 16 பிப்ரவரி, 2009

அதிசயமான நாடு

எழுநூற்று ஐம்பத்தொன்று சதுர கிலோமீட்டர் பரப்பளவை கொண்ட சிறிய நாடு டொமினிகா. இருபதாயிரம் மக்கள் தொகை கொண்ட இந்த நாட்டில் ஒரே ஒரு தியேட்டர் மட்டுமே உள்ளது. இங்கு டி.வி க்களே இல்லை என்பது கூடுதல் அதிசயம்.

(பின்குறிப்பு : அங்கு இலவச டிவி திட்டம் ஏதும் இல்லை போலும்)

ஞாயிறு, 15 பிப்ரவரி, 2009

நண்பனைத் தேடி

நேத்து உன்னைத் தேடி உன் வீட்டுக்கு வந்தேன். உன்னை எங்கேன்னு உங்க அப்பாகிட்ட கேட்டதற்கு "அந்தமாடு எங்க மேயுதோ?'ன்னு சொன்னாருடா. உனக்கு உன் வீட்டில் மரியாதை அவ்வளவுதானா?'' "


"ஓகோ... உன்னைத் தேடி ஒரு கழுதை வந்திச்சின்னு சொன்னாரு... அது நீ தானா?''

மூன்று சர்தார்ஜிக்கள்

மூன்று சர்தார்ஜிக்கள் வண்டியில் ட்ரிபிள்ஸ் வந்து கொண்டிருந்தார்கள். போலீஸ்காரர் ஒருவர் கையைக் காட்டி வழிமறிக்க வண்டி ஓட்டி வந்த சர்தார்ஜி சொன்னார் "ஏற்கனவே நாங்க மூணு பேர் போய்ட்டு இருக்கோம், இப்ப வந்து லிப்ட் கேக்குறியே, அறிவில்லையா உனக்கு?"

பாசம்

தெனமும் பூ வாங்கிகிட்டு போறியே பொண்டாட்டிமேல அவ்வளவு பாசமா?

இல்லை பாசம் பூக்காரி மேல.

டீயில் ஈ

ஒரு டீக்கடையில்: என்னையா டீயிலே “ஈ” குளிக்குது!


ஆமா...நீ கொடுக்கர இரண்டரை ரூபா காசுக்கு திரிஷ்ஷாவா வந்து குளிப்பா! பேசாம குடிய்யா.

அசோகர்

ஆசிரியர்: அசோகர் ஏன் குளங்கள் வெட்டினார்? மரங்கள் நட்டார்?


மாணவன்: குளங்கள்... பெண்கள் குளிக்க! மரங்கள்... பின்னாலிருந்து ஆண்கள் எட்டிப்பார்க்க!


தூரப்பார்வை

டாக்டர் எனக்கு வர வர சிறிது தூரத்தில் இருக்கும் பொருட்கள் தெரியவில்லை.

சரி இங்கே வாருங்கள் . அதோ தெரிகிறதே அது என்ன?

நிலா டாக்டர்

நல்லது. இதை விட நீங்கள் எவ்வளவு தூரம் தெரிய வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்கள்.

சனி, 14 பிப்ரவரி, 2009

காவிரி நதிநீர் வாங்கித்தர வக்கில்லாத வேசி மக்கள் - சீமான்

பத்திரிக்கைச் செய்தி : காவிரி நதிநீர் வாங்கித்தர வக்கில்லாத வேசி மக்கள் - சீமான்

இது போல் இவர் பேசியிருப்பது சரியா இல்லை தவறா? என்பதை அறிவதை விடுத்து, சற்றே நோக்கினால் அவரது உள்ளக் குமுறல் தெளிவாக விளங்கும்.
சிலர் அவரை இலங்கைக்குச் சென்று போராடச் சொல்லுங்கள் என்று சொல்கிறார்கள்.

பக்கத்து வீட்டுக்காரன்தானே செத்தால் சாகிறான் என்று பார்த்துக்கொண்டு இருக்கும் நம் மக்களுக்கு பக்கத்து நாட்டுக்காரன் எப்படிப் போனால் என்ன என்கின்ற மனோபாவம் இருக்கும் வரை இது போன்ற பிரச்சனைகளுக்கு எளிதில் தீர்வு கிடைக்க வாய்ப்பில்லை என்பதே உண்மை.

தமிழகத்தின் தலைநகரில் ஒரு சம்பவம் என்றால் அதற்கான ஆதரவையோ அல்லது எதிர்ப்பையோ காட்ட வேண்டுமென்றால் தலைநகருக்குதான் செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை.

காவிரி நதியாக இருந்தாலும், காதலாக இருந்தாலும், ஜாதியோ, மதமோ அல்லது வேறெந்த சமூகப் பிரச்சனையாயினும் திரைப்படங்களில் வெற்றி அடைவதில் தான் தமிழனுக்கு சந்தோசம், மனநிறைவு எல்லாமும். கனவிலும் கற்பனையிலும் மனநிறைவு அடைவதில் தமிழனுக்கு நிகர் அவனேதான்.

இலங்கைத் தமிழர் பிரச்சனையை மையமாக வைத்து, அறப்போராட்டமோ அல்லது ஆயுதப்போரட்டமோ நடத்துவதை மையக் கருவாக வைத்து, தமிழன் வெற்றி பெற்று ஆட்சி அதிகாரமோ அல்லது தனி நாடோ கிடைப்பதாக படம் முடிவுற்றால், அப்படம் நம்மூரில் பல வெள்ளி விழாக்களைக் காணும்.

சீமான் பேசிய பேச்சுக்களில் இவ்வளவு கடுமையான வார்த்தைகளைப் பிரயோகித்ததில் எனக்கும் உடன்பாடு இல்லைதான். ஆனாலும் அவரது குமுறல் நன்கு வெளிப்பட்டு இருக்கிறது. இனி வரும் காலங்களில் இது போன்ற கடுமையான பேச்சுகளை அவர் தவிர்க்க வேண்டும் என்பதே என்னைப் போன்றோரின் வேண்டுகோள் . அதுவே நமது ஆசையும் கூட.

இரா. முத்துப்பாண்டியன்




வியாழன், 12 பிப்ரவரி, 2009

இராமலிங்க ராஜூவும் ஐந்து வயது சிறுமியும்

பத்திரிக்கை செய்திகள்

ஒன்று - ரூபாய் இருநூற்று முப்பது திருடிய சிறுமிக்கு அடி உதை.

இரண்டு - ரூபாய் எட்டாயிரம் கோடி மோசடி செய்த இராமலிங்க ராஜூவுக்கு சிறை விதிகளின் படி சலுகைகள்.

சட்டத்தின் முன் அனைவரும் சமமா? இந்த இரண்டு நிகழ்வுகளையும் பார்த்தால் மேற்கண்ட கேள்வி அனைவர் மனதிலும் எழும்.

முதலாவதாக அந்த சிறுமி திருடியது ரூபாய் இருநூற்று முப்பது. அவளுக்கு கிடைத்த தண்டனை சிறுமி என்றும் பாராமல் சில மோசமான காவலர்களால் தாக்கப்பட்டது. காவலர்களே உங்கள் வீரத்தை ஒரு சிறுமியிடம் தான் காட்ட வேண்டுமா? ஐந்து வயது என்பது அறியாத வயதுதானே? நாம்தானே தவறென்றால் தவறென்று சுட்டிக்காட்டி அறிவுறுத்த வேண்டும். அடிப்பது எந்த விதத்தில் நியாயம்?

இரண்டாவது இராமலிங்க ராஜூ மோசடி செய்தது ரூபாய் எட்டாயிரம் கோடி. அவருக்கு நீதிமன்ற விதிகளின் படி (என்ன விதியோ) அவருக்கென தனியான சொகுசு குளுகுளு அறை, கட்டில், மெத்தை, தொலைக்காட்சி , வீட்டுச் சாப்பாடு மற்றும் இன்ன பிற வசதிகள். அவருக்கு இது போன்ற வசதிகள் செய்து கொடுப்பதை நிறுத்த வேண்டும் என்பதோ, சிறுமியின் திருட்டையும், அதேபோல் லஞ்சம் வாங்கியோ, அல்லது திருடியோ , வேறுபல குற்றங்களுக்காக தண்டனை பெறுகின்ற குற்றவாளிகளின் குற்றங்களை நியாயப்படுத்த வேண்டும் என்பதோ இந்த கட்டுரையின் நோக்கமல்ல.
மாறாக அரசியல் சட்டம் என்பது அனைவருக்காகவும், சட்டத்தின் முன் அனைவரும் சரிசமம் என்பதற்காகவும் உருவாக்கப்பட்டது தானே ஒழிய ஏற்றத்தாழ்வுகளுடன் இருப்பதற்காக அல்ல என்பதை நினைவு கூறுவதற்காகவே.

இது போன்ற சம்பவங்களை பார்ப்பவர்கள் மத்தியில் எந்த ஒரு குற்றமாயினும் சிறிய அளவிலே இல்லாமல் பெரிய அளவிலே செய்தால் தண்டனை குறைவாக அல்லது சிறிய அளவில் தன்டனையுடன் சகல வசதிகளும் கிடைக்கும் (முக்கியமாக சில அரசியல்வாதிகள்) என்றதொரு தோற்றத்தை ஏற்படுத்தி விடாதா? தவறான முன்னுதாரணம் வேறு ஆகி விடுமே.

மதி கொண்ட மனிதனால் இயற்றப்பட்ட விதி(கள்) ஏன் சில நேரங்களில் சிலருக்கு ஒற்றைத் தராசாகவே நிற்கிறது.

- இந்திய அரசியல் சட்ட திட்டங்களுக்கும், இறையாண்மைக்கும் கட்டுப்பட்ட இந்திய தமிழன்.



திங்கள், 9 பிப்ரவரி, 2009

மனைவியின் நினைவாக

ஷாஜகான் மும்தாஜ் நினைவாக தாஜ்மஹால் கட்டினார். நீங்க எனக்காக என்ன கட்டுவீங்க?

எனக்கு அவ்வளவு வசதி எல்லாம் இல்லை. வேணுமின்னா உன் தங்கச்சிய கட்டுறேன்.

ஞாயிறு, 8 பிப்ரவரி, 2009

கள்ளத்தொடர்பு

'நம்மோட கள்ளத்தொடர்பு தெரிஞ்சுட்டதால, உன்னை வேலையை விட்டு நிறுத்த போறா என் மனைவி !' '


கவலைப்படாதீங்க எஜமான், உங்களுக்கு நான் வெளியில இருந்து ஆதரவு தர்றேன் !'

சின்ன வீடு

தலைவருக்கு எல்லாமே பொருத்தமாய் அமைந்திடுச்சா..... எப்படி ?


அவருக்கு ஒரு சின்ன வீடாம் !.... தேர்தலில் அவர் சின்னமும் வீடாம் !

நெஞ்சில் ஈட்டி

'நெஞ்சில் ஈட்டி பாயும் அளவிற்கு நீங்கள் எதிர்த்து போர் புரிந்தீர்களா மன்னா ?' '


ஊஹூம்... எவ்வளவு தூரத்தில் துரத்தி வர்றான்னு திரும்பிப் பார்த்தபோது. சண்டாளப் பாவி அம்பை எய்திட்டான்யா !'

போலி டாக்டர்

'அவர் போலி டாக்டர்னு எப்படிக் கண்டுபிடிச்ச?


சில்லறை இல்ல..தர வேண்டிய மீதி பாக்கிக்கு ஓரு ஊசி போடவான்ணு கேக்குறாரே!'.

மன்னரின் கம்பளம்

'அமைச்சரே... இங்க விரித்திருந்த கம்பளம் எங்கே ?

சம்பளம் தர வக்கில்லை....கம்பளம் ஒரு கேடா’னு ஒரு சேவகன் சுருட்டிச் சென்று விட்டான் மன்னா !'

அரிசியும் ஆபரேசனும்

ஆப்ரேசன் முடியறவரைக்கும் நீங்க அரிசியே சேர்த்துக்கக் கூடாது !' '

ஆபரேசனுக்கு அப்புறம் டாக்டர் ?

உங்க சொந்தக்காரங்களே வாய்ல போடுவாங்க !'

யார் முட்டாள்

குமாஸ்தா : போடா, முட்டாள் !

டைப்பிஸ்ட்: போடா, நீ தான் முட்டாள் !

மேனேஜர்: என்ன அங்கே கூச்சல்? நான் ஒருத்தன் இங்கே இருப்பது உங்களுக்கு தெரியலையா ?

போலீஸ் ஸ்டேசனில்

'யோவ்! நான் இல்லாதப்ப புகார் தரவந்த பொண்ணுகிட்ட தப்பா நடந்துக்க முயற்சி பண்ணினியாமே?

நீங்கதானே ஸார் உங்க வேலையையும் சேர்த்து என்னை பார்க்க சொல்லிட்டு போனீங்க?

ஜெயிலில் சாப்பாடு

'சாப்பிடும்போது ஏம்பா சிரிக்கறே?' '

சிக்கன் செய்து தரலைன்னு மனைவியை அடிச்சேன்... இப்ப வாரம் ரெண்டு தடவை சிக்கன் கிடைக்குது!'

சனி, 7 பிப்ரவரி, 2009

மாடு வாங்க லோன்

உன் பேர் என்ன?

அடைக்கலசாமி

நீ முன்னாடி வாங்குன லோன் என்னாச்சு?

அத இன்னும் அடைக்கலசாமி

மாட்டு லோன் கேட்டு வந்திருக்கியே எப்படி கட்டுவே?

கயிறு வாங்கித்தான் சாமி கட்டுவேன்.

நீதிமன்றத்தில் குற்றவாளி

கீதை மேல கைய வச்சு உண்மைய சொல்லு.

ஏற்கனவே சீதை மேல கைய வச்சுதான் இங்க நிற்கிறேன். கீதை மேல வேற கைய வைக்கணுமா?

புகைவண்டியில் மனைவி

போலீஸ் ஸ்டேசனில் :
அய்யா என் மனைவி ட்ரைன்ல இருந்து விழுந்துட்டா
அச்சச்சோ செயின பிடிச்சு இழுக்க வேண்டியது தானே?
நானும் இழுத்தேங்க அஞ்சு பவுன் மட்டும் தான் கையில வந்துச்சு.

யானையும் எறும்பும்

ஒரு யானையும் எறும்பும் உயிருக்கு உயிராக காதலித்தன. ஆனால் திருமணத்திற்கு எறும்பு வீட்டில் சம்மதிக்கவில்லை. உடனே எறும்பு அதன் அம்மா அப்பாவின் காதில் ஏதோ கிசுகிசுத்தது. உடனே அம்மா எறும்பும் அப்பா எறும்பும் மயங்கி விழுந்து விட்டன. அப்படி என்ன சொன்னது எறும்பு,
" யானையின் குழந்தை என் வயிற்றில் வளர்கிறது".

வீட்டில் திருடன்

ஒரு வீட்டில் திருடன் ஒருவன் நகை பணம் எல்லாத்தையும் திருடிக்கொண்டு இருந்தான். அதைப் பார்த்து விட்ட அந்த வீட்டில் இருந்த குழந்தை அவன் கிளம்பும்போது " மரியாதையா என் பள்ளிகூட பையையும் எடுத்துக் கொண்டு போகிறாயா இல்லை அம்மாவை எழுப்பட்டுமா" என்றது.

இரண்டு லாரிகள்

பழுதடைந்த ஒரு லாரியை கயிறால் கட்டி இழுத்துச் சென்றது மற்றொரு லாரி. இதை சாலையில் கண்ட ஒருவர் "என்னடா இது ஒரு சிறிய கயிறை தூக்க இரண்டு லாரிகளை உபயோகிக்கிறார்களே " என்றாராம்.

காதலி

டிவி எஸ் வாகனத்தில் சென்றேன் ஹாய் என்றாள்
ஹோண்டாவில் சென்றேன் ஹலோ என்றாள்
ஹோண்டா சிட்டியில் சென்றேன் கை கொடுத்தாள்
அத்தனையும் நண்பனுடையது என்றேன் "அண்ணா" என்றாள்.

வியாழன், 5 பிப்ரவரி, 2009

கலைஞருக்கு ஒரு கவிதை

ஈழத்தமிழருக்காய் என்பதவி துறப்பேனோ?ஆளும்ஆசையினை அழித்துவிட்டுப்போவேனோ? மாழும் ஈழத்தமிழ் மக்களிக்காய் இரங்கியென்ன?சாகும்வரைசுகமாய் முதல்வராய் வாழ்வேனே.!
ஈழத்தமிழருக்காய் என்பதவி துறப்பேனோ?ஆளும்ஆசையினை அழித்துவிட்டுப்போவேனோ? மாழும் ஈழத்தமிழ் மக்களிக்காய் இரங்கியென்ன?சாகும்வரைசுகமாய் முதல்வராய் வாழ்வேனே.!
தமிழர்க்காய் உயிர்கொடுப்பான் கருணாநிதியென்றுதமிழாநீ நம்பிவிட்டால் நானா பொறுப்பு?தன்மானத் தமிழன்நான் பதவியை விட்டுவிட்டால்வருமானம் போய்விடாதோ தமிழாநீ யோசியடா!!
உலகத்தமிழர்களின் தலைவன்என்று பெயரெடுக்கஉலுத்தல் வேலைபல உருப்படியாய் செய்தவன்நான்புலிகள் கிளிநொச்சியை தோற்ற தை மாதத்தைஉலகம் புத்தாண்டாய் கொண்டாட வைத்தவன்நான்.
தேசியத்தலைவரென்று புலித்தலைவன் பெயர்எடுக்கபாசிசத்தலைவன் நான் பார்த்தச்சும்மா இருப்பேனோ?ஆசியஉலகமெல்லாம் தமிழர்களின் தலைவன்நான்!ஆதலினால் செத்தாலும் ஆதரிக்கேன் பிரபாகரனை.
நாட்டைப் பிரிப்பதற்கு புலித்துணையாய் இருப்பேனோ? காட்டில் அழிகின்ற தமிழர்காய் பதவிதுறப்பேனோ?பாட்டுக்கதையெழுதி அரசியலைப்பிடித்தவன் நான்கோட்டையைவிட்டுவிட்டு கோயில்மடம் போவேனோ?
ஏம்ஜிஆர் வளர்த்த புலி எப்படியும்போகட்டும்எம்மகன்கள் நலம்காப்போம் ஏவல்செய்வோம் மத்திக்குஎந்தஈழ தலைவர்களும் எமக்கென்றம் தேவையில்லைஎப்படியும் பிரபாகரனை ஆதரிக்கப்போவதில்லை.
ஈழத்தமிழா நீ முடிவை அறிந்தாயா?துரோகத்தனத்துக்கே இந்தியாவில்ஓர் கருணா!வீரத்தமிழனடா எம்வேங்கை தலைவனடா!விதிவென்று தனியாக களம்வெல்வான் பார்த்துஇரு.
நல்லூர். ஈழதாசன் - கனடா

விடுகதை 1

பளபளவென்று பட்டுடுத்திப்பதினாயிரம் குஞ்சலம் தொங்கவிட்டுத்தெருவைச் சுற்றி வருகிற பெண்திரும்பிப் பார்க்க மாட்டாளாம். - அது என்ன? -

புதன், 4 பிப்ரவரி, 2009

அண்ணன் சாக மாட்டார் . திண்ணையும் காலியாகாது

அண்ணன் சாக மாட்டார் . திண்ணையும் காலியாகாது - முதல்வர் பேச்சு .

என்ன ஒரு அருமையான எடுத்துக்காட்டு. தலைவர் திரு. கலைஞர் அவர்கள் இப்போது கூட இலங்கை தமிழர்களைப் பற்றி பேசுவார் என்று நாம் நினைத்தால் அது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பதை மீண்டும் ஒரு முறை நமக்குத் தெளிவுபடுத்தி இருக்கிறார். அவருக்கு அவரது திண்ணை மீது எவ்வளவு மோகம் இருக்கிறது என்பதும் இதன் மூலம் தெளிவாகிறது. தமிழினத் தலைவன் என்பது தமிழ் வருடப்பிறப்பை சித்திரையில் இருந்து தை மாதத்திற்கு மாற்றுவதும், பொங்கலன்று இலவச அரிசி வழங்குவதோடு நிறுத்திக் கொள்வதும் தான் போலும்.
சில தினங்களுக்கு முன்பு முத்துக்குமார் என்பவர் இறந்ததை அரசியலாக்கக் கூடாது என்றவர் இப்பொழுது திண்ணையைப் பற்றி பேசுவது வேடிக்கைதான். பதவிக்கு மற்றும் அரசுக்கு எந்தப் பிரச்னையும் வராமல் இலங்கைப் பிரச்சனையில் ஒரு தீர்வு காண வழி கிடைக்குமென்றால் யாராவது கலைஞருக்கு சொல்லுங்கள்.
நண்பர் ஒருவர் வேடிக்கையாக "இராமாயணத்தில் ஒரு கூனி, மகாபாரதத்தில் ஒரு சகுனி, தமிழனுக்கு ஒரு கருணாநிதி" என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
நாம் என்ன நினைப்பது ?

இறைவனை அடையும் வழி

உருக்கண்டு எள்ளாமை வேண்டும். உன் உடலில் உயிர் உள்ளவரை உனக்கு உன் மனம் மட்டுமே சொந்தம். அதுவும் உணர்வு இருக்கும்போது மட்டுமே. தூங்கும்போது மனம் உனக்குச் சொந்தமல்ல. ஆகவே, உணர்வால் மனத்தை அடக்கு. எப்பொழுதும் நீ உன் உணர்விலேயே நில். அது உனக்கு இறைவனை அடைய வழிகாட்டும்."

வண்டிக்கு பெட்ரோல்

முதலாளி ஒருவர் தனது வண்டியை ஸ்டார்ட் செய்தார். அது ஸ்டார்ட் ஆகவில்லை. கிக்கரை காலால் அடித்து ஓய்ந்து போய்..."ஏண்டா... பெட்ரோலை ஊத்தினாயா இல்லையா?" என்று வேலைக்காரனிடம் கேட்டார்.
"ஊத்திட்டேன் முதலாளி..."
"எல்லாத்தையும் ஊத்தினியா?"
"ஒரு சொட்டு கூட மிச்சம் வக்கல முதலாளி... எல்லாத்தையும் ஊத்திட்டு, போதாததுக்கு தண்ணிய விட்டு அலசி ஊத்தினேன்...!"என்றான் வேலையாள்.

செவ்வாய், 3 பிப்ரவரி, 2009

மதம் காரணம் அல்ல

நமது சமுதாயம் இப்போது இருக்கும் தாழ்ந்த நிலைமைக்கு மதம் காரணம் அல்ல. மதத்தை முறையாகப் பின்பற்றாமல் போனதுதான் சமுதாயத்தின் வீழ்ச்சிக்குக் காரணம் என்று நான் சொல்கிறேன்.

- விவேகானந்தர்

திங்கள், 2 பிப்ரவரி, 2009

நாயும் கல்லும்

ஒருத்தர் பனி அதிகம் உள்ள நகரத்தில் நாயால் துரத்தப்பட்டு கீழே விழுந்தாராம். நாயை அடிக்கக் கல்லைத்தேட அது பனியால் தரையோடு ஒட்டிக்கொண்டு வரவில்லையாம்."என்னடா ஊரு இது தலைகீழா இருக்குது. கட்டிவைக்கவேண்டிய நாயை அவிழ்த்துவிட்டு கல்லைக் கட்டி வைத்திருக்கிறார்களே." என்றாராம்.

கிரீடம்

வழக்கறிஞர் : சாமி தலைல இருந்த கிரீடத்தை ஏன்பா திருடினே?

திருடன் : நான் சாமிக்கு மொட்டை போடுறதா வேண்டிகிடேங்க.

சொந்தக்காரர்கள்

கணவனும் மனைவியும் கோவிலுக்கு சென்றனர். அங்கே இருந்த சில குரங்குகளைப் பார்த்து கணவன் மனைவியிடம் கேலியாக "ஏய் அங்க பாருடி உங்க சொந்தக்காரங்க எல்லாம் இங்க இருக்காங்க" என்றான்.
அதற்கு அவன் மனைவி " ஆமாங்க என் மாமனார், மாமியார், நாத்தனார் மற்றும் கொழுந்தனார் எல்லோரும் இங்க இருக்காங்க" என்றாள் அமைதியாக.

ஞாயிறு, 1 பிப்ரவரி, 2009

கல்லூரிகள் மற்றும் அதைச் சார்ந்த தங்கும் விடுதிகளுக்கு காலவரையற்ற விடுமுறை

பத்திரிக்கைச் செய்தி : கல்லூரிகள் மற்றும் அதைச் சார்ந்த தங்கும் விடுதிகளுக்கு காலவரையற்ற விடுமுறை.
தற்போது தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கும் இலங்கை தமிழர்களுக்கான போராட்டம் மேலும் மேலும் வலுவடைந்து விடக்கூடாது என்பதில் அரசு தீவிரமாக உள்ளது இதன் மூலம் தெரிகிறது. திரு. ஜெயலலிதா அவர்களும், தமிழக மற்றும் தேசிய காங்கிரசும் அவரவர் நிலைபாட்டினை தெளிவாக பலமுறை தெளிவுபடுத்தி விட்டனர்.
ஆனால் நமது முதல்வரின் நிலைப்பாடு என்ன என்பதுதான் என்னைப்போன்ற சாமானியனுக்கு இன்னும் விளங்கவில்லை. உண்மையிலே அது ஒரு புரியாத புதிர்தான்.
ஒரு வேளை இந்நேரம் தி மு க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் எதிர்க்கட்சியாக இருந்து இருந்தால் இந்தப் போராட்டத்தை அவைகளே முன்நின்று இன்னும் பெரிய அளவிலே நடத்தி இருக்கக் கூடும்.
இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ ? பொறுத்திருந்து பார்ப்போம்.

மருமகனுக்கு ஒரு கடிதம்

அன்புள்ள மருமகனுக்கு,

இங்கு எங்கள் ஊரில் ஒரே கலவரமாக இருக்கிறது. ஊருக்கு புதிதாக வந்த இரண்டு பேரை ஒரு கும்பல் வெட்டி கொலை செய்து விட்டு அவர்கள் அணிந்திருந்த நகைகளைக் கொள்ளை அடித்துச் சென்று விட்டது. ஊருக்குள் புதிதாக யார் வந்தாலும் வெட்டாமல் விட மாட்டோம் என்று ஒரு கும்பல் சுற்றி திரிகிறது. ஆதலால் தலை தீபாவளிக்கு நீங்கள் அவசியம் வரவும்.

இப்படிக்கு

உங்கள் அன்பு மாமனார் ,

அன்புக்கரசன்.

கட்டி

டாக்டர் உட்காரும் இடத்தில் கட்டி இருக்கு நான் என்ன செய்ய ?

கட்டி இல்லாத இடமா பாத்து கொஞ்சம் தள்ளி உட்காருங்களேன்.

காதலியின் மரணம்

ஒரு காதலன் மிகவும் வருத்ததோடு சொன்னான் : நானும் என் காதலியும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்தோம். ஆனால் எனக்கு அவளுடன் சேர்ந்து சாவதற்கு கூட கொடுத்து வைக்கவில்லை. அவள் மட்டும் இறந்து விட்டாள். நான் பிழைத்துக் கொண்டேன்.

அது எப்படி என்று கேட்டார் ஒருவர், அதற்கு இவன் பதில்.

"அவள் கயிற்றில் தொங்கினாள். நான் அவள் காலைப் பிடித்துத் தொங்கினேன்"

யார் மோசம்

ஒரு ஊரிலே ஒரு ஏழை வியாபாரி இருந்தான். அவன் 500 கிராம் எடையுள்ள ரொட்டி விற்று வந்தான்.தினமும் அரிசி விற்கும் ஒரு தொழிலாளி இந்த ஏழை வியாபாரியிடத்திலேயே நித்தமும் ரொட்டி வாங்கி சாப்பிட்டு வந்தார்.ஒரு நாள் இந்த அரிசி முதலாளிக்கு ( தொழிலாளி) வாங்கி வந்த ரொட்டியின் மீது சந்தேகம் வந்தது. உடனே அதனை படிக்கல்லு போட்டு நிறுத்தார்.அப்போது அந்த ரொட்டி 450 கிராம் மட்டுமே இருப்பதாகக் காட்டியது. உடனே இவருக்கு சரியான கோபம். தன்னை ஏமாற்றி விட்டதாக அந்த ஏழைமீது வழக்குப் போட்டார்.வழக்கும் நடைபெற்றது. அப்போது நீதிபதி முன்னிலையில் அந்த ஏழை அந்த ரொட்டி தான் விற்ற ரொட்டி என்றும்....450 கிராம் இருப்பதை தான் ஏற்கிறேன் என்றும் கூறினான்.இதனை ஏன் இப்படி செய்தாய் என்று நீதிபதி கேட்டார்.அதற்கு அவன்...மிகவும் தாழ்மையாக ஐயா...நான் வீட்டிற்கு கொண்டு செல்ல தினமும் இவர் கடையில்தான் 500 கிராம் அரிசி வாங்குவேன். என்னுடைய படிகல் தேய்ந்துவிட்டபடியால்.. இவரிடம் வாங்கிய 500 கிராம் அரிசியை வைத்தே இதுநாள் வரையில் வியாபாரம் செய்துவந்தேன்.இப்போது மனம் வேதனையடைகிறேன்....இந்த முதலாளியின் கடையில் வேண்டிய அரிசியின் நிறுவையை நம்பி பல மக்களுக்கு 50 கிராம் குறைவாக ரொட்டிகளை விற்றுவிட்டேன் என்று..உடனே அந்த அரிசிக்கடை முதலாளியின் அரிசிகளை நிறுத்துப்பார்தால் எல்லாப்பொதிகளுமே 450 கிராமாகவே காணப்பட்டது.

பார்த்தீர்களா இதில் யார் மோசக்காறர்கள்..? என்று..?

மதர் ட்ங்

மகன் : அப்பா, 'மதர் டங்' என்ற காலத்துக்கு நேரே என்ன எழுதனும்?""

அப்பா : ரொம்ப 'நீளம்'னு எழுது"...

காது வலி

காது வலிக்குதுன்னு நீங்க கொடுத்த மாத்திரையில் வலிசுத்தமா நின்னு போச்சு டாக்டர்'..."

அப்படியா.....இப்ப எதுக்காக வந்திருக்கீங்க?""

என்ன டாக்டர் வாயை மட்டும் அசைக்கறீங்க?....."

சிந்தனையும் வார்த்தையும்

தனியாக இருக்கும்போது சிந்தனையிலும் கூட்டத்தில் இருக்கும்போது வார்த்தைகளிலும் கவனமாக இருக்க வேண்டும்.

மறு கன்னம்

அன்பே !
நான் உன்னை விரும்புவது தவறென்றால் அறைந்து விடு
திருப்பிக் காட்டுகிறேன் மறு கன்னத்தையும் ஆனால் அறைவது
உன் உதடுகளால் இருக்கட்டும்.