Earn Money - பணம் சம்பாதிக்க

வியாழன், 26 பிப்ரவரி, 2009

தொண்ணூறு வயதில் கல்யாணம்

ஒரு ஊருல தொண்ணூறு வயசு பெரியவரு ஒருத்தரு இருந்தாரு. அவரு ஒருநாள் குடும்ப டாக்டர்க்கிட்ட போய் நான் ஒரு கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு இருக்கேன், என்ன சொல்றீங்கன்னு கேட்டாரு. அதுக்கு டாக்டரு அதெல்லாம் வேலைக்காவது எதுக்கு ரிஸ்க்ன்னு சொல்லிட்டாரு. ஆனா இவரு கேக்கலை. இருபத்தியெட்டு வயசு பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டாரு.
நாலு மாசம் கழிச்சு திரும்ப டாக்டர பாக்க வந்தாரு… என்னமோ வேலைக்காவது சொன்னீங்களே, என் சம்சாரம் இப்ப மூணு மாசம்னு பெருமையா சொன்னாரு.

அதுக்கு டாக்டரு நான் ஒரு கதை சொல்றேன் கேளுங்கன்னு சொல்லி நான் ஒரு தடவை ஆப்பிரிக்க காட்டுக்கு போனப்ப ஒரு சிங்கம் என் எதிர்க்க வந்துச்சி. பயங்கரமா உறுமிச்சி. எனக்கு வேற வழி இல்ல. நான் உடனே என் கையில் இருந்த குடையால அந்த சிங்கத்தை சுட்டேன். அந்த சிங்கம் குண்டு பாய்ஞ்சி செத்துப் போச்சு என கதையை முடிந்தார்.
உடனே அந்த பெருசு அது எப்படி குடையில இருந்து குண்டு வரும்? பின்னாடி இருந்து யாராவது துப்பாக்கியால சுட்டுருப்பாங்கன்னு சொன்னாரு. அதுக்கு டாக்டரு உங்க விஷயத்திலயும் அதான் நடந்துருக்குதுன்னு சொன்னாரு.

ஞாயிறு, 22 பிப்ரவரி, 2009

எட்டுப்பட்டிக்கும் சொந்தக்காரன்

'எட்டுப்பட்டிக்கும் சொந்தக்கார‎ன்'னு சொ‎ன்னத நம்பி பொண்ணக் கொடுத்தது தப்பாப் போச்சு""

ஏ‎ன்.. என்னாச்சு?""

அவ‎ன் கேரளாக்கார‎ன். அங்கே 'பட்டி'‎ன்னா நாயாமே!!"

யார் இருப்பது

மனைவி: இந்த வீட்ல ஒண்ணு நான் இருக்கணும் இல்ல உங்க அம்மா இருக்கணும்!

கணவன்: வேலைக்காரிய மட்டும் விட்டுட்டு நீங்க ரெண்டு பேரும் எங்கேயாவது போய்த் தொலைங்க.

செவ்வாய், 17 பிப்ரவரி, 2009

விதியை மதியால் வெல்ல முடியுமா?

வியாச முனிவரிடம் ஒரு சிஷ்யன் இருந்தான். அவன் அவருக்கு வேண்டிய பணிவிடைகளை செவ்வனே செய்து வந்தான். அவனது பணிவிடைகளால் வியாசரும் மிகவும் மகிழ்ந்து போனார்.

ஒரு நாள் ஆசிரமத்திற்குத் தேவையான விறகுகளைச் சேகரிப்பதற்காக அந்த சீடன் காட்டிற்குள் சென்ற போது ஒரு முனிவரை சந்திக்கிறான். முக்காலமும் அறிந்த முனிவரான அவர், அவனை முன்னே செல்ல விட்டு 'இவன் எவ்வளவு பணிவிடைகள் செய்தாலும் அவனது குருவினாலேயே (வியாசர்) அவனுக்கு மரணம் ஏற்பட வேண்டுமென்பது விதி என்று கூறிச் செல்கிறார்.


அதைக் கேட்டுவிட்ட அந்த சீடனுக்கு அன்றிலிருந்து மனசே சரி இல்லாமல் முக வாட்டத்துடனேயே திரிந்தான் . ஆனால் அவன் குருவிற்கு செய்ய வேண்டியவைகளை எப்போதும் போல செய்து வந்தான். அவனது முகவாட்டத்தைக் கண்ட வியாசர் அவனிடம் அதற்கான காரணத்தை வினவினார். முதலில் கூற மறுத்த சீடன் பிறகு குருவின் கட்டளையின் பேரில் காட்டில் நடந்தவைகளைக் கூறினான்.

அதைக்கேட்டு விட்டு பலமாகச் சிரித்த வியாசர், இதற்காகவா இவ்வளவு வருத்தம், நீ ஒன்றும் கவலைப்படாதே , நான் அந்த விதியை மாற்றிக் காட்டுகிறேன் என்று கூறி அவனை சமாதனம் செய்தார். பிறகு நேராக எமலோகம் சென்று எமதர்மனிடம் ஆயுள் நிர்ணயம் செய்து வைக்கும் சுவடியைக் கேட்டார். அவனும் மறுக்காமல் சுவடியை சித்திரகுப்தனிடம் இருந்து எடுத்துக் கொடுக்க அதில் உள்ள பக்கங்களை ஒவ்வொன்றாக புரட்டிப் பார்க்க, அவர் சீடனின் பக்கம் வந்ததும் அதில் உள்ளவைகளைப் படித்தார். அதில் பின்வருமாறு எழுதி இருந்தது,

" என்றைக்கு வியாச முனிவரானவர் பூலோகத்தில் இருந்து எமலோகம் வந்து எமதர்மனிடம் சுவடியை வாங்கி இந்தப் பக்கத்தை புரட்டிப் பார்க்கிறாரோ , அன்று இவனுக்கு மரணம் சம்பவிக்கும்"

(நடக்க இருப்பதை ஒரு போதும் தடுத்து விட முடியாது.)
- இரா. முத்துப்பாண்டியன்.

திங்கள், 16 பிப்ரவரி, 2009

அதிசயமான நாடு

எழுநூற்று ஐம்பத்தொன்று சதுர கிலோமீட்டர் பரப்பளவை கொண்ட சிறிய நாடு டொமினிகா. இருபதாயிரம் மக்கள் தொகை கொண்ட இந்த நாட்டில் ஒரே ஒரு தியேட்டர் மட்டுமே உள்ளது. இங்கு டி.வி க்களே இல்லை என்பது கூடுதல் அதிசயம்.

(பின்குறிப்பு : அங்கு இலவச டிவி திட்டம் ஏதும் இல்லை போலும்)

ஞாயிறு, 15 பிப்ரவரி, 2009

நண்பனைத் தேடி

நேத்து உன்னைத் தேடி உன் வீட்டுக்கு வந்தேன். உன்னை எங்கேன்னு உங்க அப்பாகிட்ட கேட்டதற்கு "அந்தமாடு எங்க மேயுதோ?'ன்னு சொன்னாருடா. உனக்கு உன் வீட்டில் மரியாதை அவ்வளவுதானா?'' "


"ஓகோ... உன்னைத் தேடி ஒரு கழுதை வந்திச்சின்னு சொன்னாரு... அது நீ தானா?''

மூன்று சர்தார்ஜிக்கள்

மூன்று சர்தார்ஜிக்கள் வண்டியில் ட்ரிபிள்ஸ் வந்து கொண்டிருந்தார்கள். போலீஸ்காரர் ஒருவர் கையைக் காட்டி வழிமறிக்க வண்டி ஓட்டி வந்த சர்தார்ஜி சொன்னார் "ஏற்கனவே நாங்க மூணு பேர் போய்ட்டு இருக்கோம், இப்ப வந்து லிப்ட் கேக்குறியே, அறிவில்லையா உனக்கு?"

பாசம்

தெனமும் பூ வாங்கிகிட்டு போறியே பொண்டாட்டிமேல அவ்வளவு பாசமா?

இல்லை பாசம் பூக்காரி மேல.

டீயில் ஈ

ஒரு டீக்கடையில்: என்னையா டீயிலே “ஈ” குளிக்குது!


ஆமா...நீ கொடுக்கர இரண்டரை ரூபா காசுக்கு திரிஷ்ஷாவா வந்து குளிப்பா! பேசாம குடிய்யா.

அசோகர்

ஆசிரியர்: அசோகர் ஏன் குளங்கள் வெட்டினார்? மரங்கள் நட்டார்?


மாணவன்: குளங்கள்... பெண்கள் குளிக்க! மரங்கள்... பின்னாலிருந்து ஆண்கள் எட்டிப்பார்க்க!


தூரப்பார்வை

டாக்டர் எனக்கு வர வர சிறிது தூரத்தில் இருக்கும் பொருட்கள் தெரியவில்லை.

சரி இங்கே வாருங்கள் . அதோ தெரிகிறதே அது என்ன?

நிலா டாக்டர்

நல்லது. இதை விட நீங்கள் எவ்வளவு தூரம் தெரிய வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்கள்.

சனி, 14 பிப்ரவரி, 2009

காவிரி நதிநீர் வாங்கித்தர வக்கில்லாத வேசி மக்கள் - சீமான்

பத்திரிக்கைச் செய்தி : காவிரி நதிநீர் வாங்கித்தர வக்கில்லாத வேசி மக்கள் - சீமான்

இது போல் இவர் பேசியிருப்பது சரியா இல்லை தவறா? என்பதை அறிவதை விடுத்து, சற்றே நோக்கினால் அவரது உள்ளக் குமுறல் தெளிவாக விளங்கும்.
சிலர் அவரை இலங்கைக்குச் சென்று போராடச் சொல்லுங்கள் என்று சொல்கிறார்கள்.

பக்கத்து வீட்டுக்காரன்தானே செத்தால் சாகிறான் என்று பார்த்துக்கொண்டு இருக்கும் நம் மக்களுக்கு பக்கத்து நாட்டுக்காரன் எப்படிப் போனால் என்ன என்கின்ற மனோபாவம் இருக்கும் வரை இது போன்ற பிரச்சனைகளுக்கு எளிதில் தீர்வு கிடைக்க வாய்ப்பில்லை என்பதே உண்மை.

தமிழகத்தின் தலைநகரில் ஒரு சம்பவம் என்றால் அதற்கான ஆதரவையோ அல்லது எதிர்ப்பையோ காட்ட வேண்டுமென்றால் தலைநகருக்குதான் செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை.

காவிரி நதியாக இருந்தாலும், காதலாக இருந்தாலும், ஜாதியோ, மதமோ அல்லது வேறெந்த சமூகப் பிரச்சனையாயினும் திரைப்படங்களில் வெற்றி அடைவதில் தான் தமிழனுக்கு சந்தோசம், மனநிறைவு எல்லாமும். கனவிலும் கற்பனையிலும் மனநிறைவு அடைவதில் தமிழனுக்கு நிகர் அவனேதான்.

இலங்கைத் தமிழர் பிரச்சனையை மையமாக வைத்து, அறப்போராட்டமோ அல்லது ஆயுதப்போரட்டமோ நடத்துவதை மையக் கருவாக வைத்து, தமிழன் வெற்றி பெற்று ஆட்சி அதிகாரமோ அல்லது தனி நாடோ கிடைப்பதாக படம் முடிவுற்றால், அப்படம் நம்மூரில் பல வெள்ளி விழாக்களைக் காணும்.

சீமான் பேசிய பேச்சுக்களில் இவ்வளவு கடுமையான வார்த்தைகளைப் பிரயோகித்ததில் எனக்கும் உடன்பாடு இல்லைதான். ஆனாலும் அவரது குமுறல் நன்கு வெளிப்பட்டு இருக்கிறது. இனி வரும் காலங்களில் இது போன்ற கடுமையான பேச்சுகளை அவர் தவிர்க்க வேண்டும் என்பதே என்னைப் போன்றோரின் வேண்டுகோள் . அதுவே நமது ஆசையும் கூட.

இரா. முத்துப்பாண்டியன்




வியாழன், 12 பிப்ரவரி, 2009

இராமலிங்க ராஜூவும் ஐந்து வயது சிறுமியும்

பத்திரிக்கை செய்திகள்

ஒன்று - ரூபாய் இருநூற்று முப்பது திருடிய சிறுமிக்கு அடி உதை.

இரண்டு - ரூபாய் எட்டாயிரம் கோடி மோசடி செய்த இராமலிங்க ராஜூவுக்கு சிறை விதிகளின் படி சலுகைகள்.

சட்டத்தின் முன் அனைவரும் சமமா? இந்த இரண்டு நிகழ்வுகளையும் பார்த்தால் மேற்கண்ட கேள்வி அனைவர் மனதிலும் எழும்.

முதலாவதாக அந்த சிறுமி திருடியது ரூபாய் இருநூற்று முப்பது. அவளுக்கு கிடைத்த தண்டனை சிறுமி என்றும் பாராமல் சில மோசமான காவலர்களால் தாக்கப்பட்டது. காவலர்களே உங்கள் வீரத்தை ஒரு சிறுமியிடம் தான் காட்ட வேண்டுமா? ஐந்து வயது என்பது அறியாத வயதுதானே? நாம்தானே தவறென்றால் தவறென்று சுட்டிக்காட்டி அறிவுறுத்த வேண்டும். அடிப்பது எந்த விதத்தில் நியாயம்?

இரண்டாவது இராமலிங்க ராஜூ மோசடி செய்தது ரூபாய் எட்டாயிரம் கோடி. அவருக்கு நீதிமன்ற விதிகளின் படி (என்ன விதியோ) அவருக்கென தனியான சொகுசு குளுகுளு அறை, கட்டில், மெத்தை, தொலைக்காட்சி , வீட்டுச் சாப்பாடு மற்றும் இன்ன பிற வசதிகள். அவருக்கு இது போன்ற வசதிகள் செய்து கொடுப்பதை நிறுத்த வேண்டும் என்பதோ, சிறுமியின் திருட்டையும், அதேபோல் லஞ்சம் வாங்கியோ, அல்லது திருடியோ , வேறுபல குற்றங்களுக்காக தண்டனை பெறுகின்ற குற்றவாளிகளின் குற்றங்களை நியாயப்படுத்த வேண்டும் என்பதோ இந்த கட்டுரையின் நோக்கமல்ல.
மாறாக அரசியல் சட்டம் என்பது அனைவருக்காகவும், சட்டத்தின் முன் அனைவரும் சரிசமம் என்பதற்காகவும் உருவாக்கப்பட்டது தானே ஒழிய ஏற்றத்தாழ்வுகளுடன் இருப்பதற்காக அல்ல என்பதை நினைவு கூறுவதற்காகவே.

இது போன்ற சம்பவங்களை பார்ப்பவர்கள் மத்தியில் எந்த ஒரு குற்றமாயினும் சிறிய அளவிலே இல்லாமல் பெரிய அளவிலே செய்தால் தண்டனை குறைவாக அல்லது சிறிய அளவில் தன்டனையுடன் சகல வசதிகளும் கிடைக்கும் (முக்கியமாக சில அரசியல்வாதிகள்) என்றதொரு தோற்றத்தை ஏற்படுத்தி விடாதா? தவறான முன்னுதாரணம் வேறு ஆகி விடுமே.

மதி கொண்ட மனிதனால் இயற்றப்பட்ட விதி(கள்) ஏன் சில நேரங்களில் சிலருக்கு ஒற்றைத் தராசாகவே நிற்கிறது.

- இந்திய அரசியல் சட்ட திட்டங்களுக்கும், இறையாண்மைக்கும் கட்டுப்பட்ட இந்திய தமிழன்.



திங்கள், 9 பிப்ரவரி, 2009

மனைவியின் நினைவாக

ஷாஜகான் மும்தாஜ் நினைவாக தாஜ்மஹால் கட்டினார். நீங்க எனக்காக என்ன கட்டுவீங்க?

எனக்கு அவ்வளவு வசதி எல்லாம் இல்லை. வேணுமின்னா உன் தங்கச்சிய கட்டுறேன்.

ஞாயிறு, 8 பிப்ரவரி, 2009

கள்ளத்தொடர்பு

'நம்மோட கள்ளத்தொடர்பு தெரிஞ்சுட்டதால, உன்னை வேலையை விட்டு நிறுத்த போறா என் மனைவி !' '


கவலைப்படாதீங்க எஜமான், உங்களுக்கு நான் வெளியில இருந்து ஆதரவு தர்றேன் !'

சின்ன வீடு

தலைவருக்கு எல்லாமே பொருத்தமாய் அமைந்திடுச்சா..... எப்படி ?


அவருக்கு ஒரு சின்ன வீடாம் !.... தேர்தலில் அவர் சின்னமும் வீடாம் !

நெஞ்சில் ஈட்டி

'நெஞ்சில் ஈட்டி பாயும் அளவிற்கு நீங்கள் எதிர்த்து போர் புரிந்தீர்களா மன்னா ?' '


ஊஹூம்... எவ்வளவு தூரத்தில் துரத்தி வர்றான்னு திரும்பிப் பார்த்தபோது. சண்டாளப் பாவி அம்பை எய்திட்டான்யா !'

போலி டாக்டர்

'அவர் போலி டாக்டர்னு எப்படிக் கண்டுபிடிச்ச?


சில்லறை இல்ல..தர வேண்டிய மீதி பாக்கிக்கு ஓரு ஊசி போடவான்ணு கேக்குறாரே!'.

மன்னரின் கம்பளம்

'அமைச்சரே... இங்க விரித்திருந்த கம்பளம் எங்கே ?

சம்பளம் தர வக்கில்லை....கம்பளம் ஒரு கேடா’னு ஒரு சேவகன் சுருட்டிச் சென்று விட்டான் மன்னா !'

அரிசியும் ஆபரேசனும்

ஆப்ரேசன் முடியறவரைக்கும் நீங்க அரிசியே சேர்த்துக்கக் கூடாது !' '

ஆபரேசனுக்கு அப்புறம் டாக்டர் ?

உங்க சொந்தக்காரங்களே வாய்ல போடுவாங்க !'