*இந்தாப்பா ராப்பிச்சை.. ரெண்டு நாளா வீட்டுக்காரர் ஊர்லே இல்ல. ரசம்தான் வச்சேன்.. வாங்கிட்டு போறியா..?
மவராசன் சமைச்சது இல்லியா.. சரி போடு தாயி.. போற உசுரு எப்படிப் போனா என்ன..?*
நகைச்சுவைகள், பொன்மொழிகள், சிறுகதைகள், கவிதைகள், ஆன்மிகம், சமூகம், அரசியல் , பண்பாடு, இயற்கை வைத்தியம், ஆகியவற்றின் என்னாலான சிறு தொகுப்புமுயற்சி. அன்பில்லாது அன்னமிடுதலும் ஊமைகண்ட கனவும் தமிழ் ஞானமில்லாதவன் அறிவும் ஒன்று.
*இந்தாப்பா ராப்பிச்சை.. ரெண்டு நாளா வீட்டுக்காரர் ஊர்லே இல்ல. ரசம்தான் வச்சேன்.. வாங்கிட்டு போறியா..?
மவராசன் சமைச்சது இல்லியா.. சரி போடு தாயி.. போற உசுரு எப்படிப் போனா என்ன..?*
சோ, லல்லு பிரசாத் யாதவ், சுப்ரமணிய சாமி இவர்களை வீரப்பன் கொண்டு போனால் யார் காப்பற்றபடுவார்கள்?
இந்த நாடு காப்பாற்றப்படும்.
ஒரே குழப்பமா இருக்குடி..
எதுக்கு..?
குடும்பக் கட்டுப்பாடு செஞ்சுகிட்டா 500 ரூபாயாம்.. கர்ப்பிணி உதவித் தொகை 5000 ரூபாயாம்.. ரெண்டையும் எப்படி வாங்குறதுன்னுதான்..!
என் காலுக்கு செருப்பில்லை என வேதனைப்பட்டேன் - காலே இல்லாத மனிதனைப் பார்க்கும் வரை.
- சீனப்பழமொழி .
நீங்கள் ஏன் எங்கள் நிறுவனத்தில் பணிபுரிய விரும்புகிறீர்கள்..?
எந்தப் புண்ணாக்குக் கம்பெனியிலாவது வேலை செஞ்சாதான் பொழப்ப ஓட்ட முடியும் .. எந்த நாய் வேலை குடுக்குதோ அங்க வேலை செய்ய வேண்டியதுதான்..அதைத்தவிர உன்கம்பேனி மேல பெருசா ஒண்ணும் மதிப்பு மரியாதை யெல்லாம் இல்லே ..!
உங்களுக்கு ஏன் இந்த வேலையைத் தரவேண்டும்..?
உன் கம்பெனி வேலையை யாராவது ஒருத்தன் செஞ்சுதானேஆகணு ம் .. என்கிட்டதான் கொடுத்துப் பாரேன்.
உங்களுடைய தனித்திறமை என்ன..?
வேலைக்கு சேர்ந்ததும், கடலை போட வழியிருக்கான்னு பார்ப்பேன் .. இங்கேருந்து என்னென்ன சுடலாம்ன்னு நோட்டம் உடுவேன்..உன் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்ததைச் சொல்லி ஊர் பூரா கடன் வாங்குவேன்.. அப்புறம் வேற கம்பெனிக்கு தாவ முயற்சி பண்ணுவேன் .. இதைத்தவிர உன் கம்பெனிக்கு சேவை செஞ்சு முன்னுக்குக் கொண்டு வரணும்ங்கிற மூட நம்பிக்கையெல்லாம் கிடையாது .
உங்கள் மிகப்பெரியபலம்..?
இதைவிட பெரிய சம்பளத்தில் வேலை கிடைச்சா அப்படியே உட்டுட்டு அங்கே ஓடிருவேன்..மனசாட்சி, நன்றியுணர்வு இதுக்கெல்லாம் முட்டாள்தனமா ,,இடமே கொடுக்காம கடுமையா நடந்துக்குவேன்..
பலவீனம் ..?
ஹி.. ஹி .. பெண்கள்..!
இதற்குமுன் வேலை பார்த்த நிறுவனத்தில் உங்கள் சாதனைகள் என்ன..?
அப்படி ஏதும் இருந்தா நான் ஏன் வேலை தேடி இங்கே வருகிறேன் .. அந்த சாதனைகளை பெருசா பில்டப்பண்ணி அங்கேயே வேணும்ங்கிற அளவுக்கு சம்பளத்தைக் கறந்துருக்க மாட்டேனா ..?
நீங்கள் சந்தித்த மிகப் பெரும் சவால் என்ன ..? அதை எப்படி வெற்றி கொண்டீர்கள்..?
ஆண்டவன் அருள்தான் காரணம் .. இதுவரைக்கும் எந்த நிர்வாகியும் மூணாவது மாசச் சம்பளத்தைக் கொடுக்கறதுக்கு முன்னே நான் ஒரு வெத்துவேட்டுன்னு கண்டுபிடிச்சதே இல்லே.
ஏன் இதற்கு முன் பார்த்த வேலையை விட்டு விட்டீர்கள்..?
நீங்கள் ஏன் இந்த வேலைக்கு நேர்காணல் நடத்த வேண்டிய அவசியம் வந்ததோ .. அதே காரணத்துக்காகத்தான்..!
இந்த பதவியில் நீங்கள் எதிர்பார்க்கும் அம்சங்கள் என்ன..?
நல்ல சம்பளம், 0 % வேலை,பக்கத்து சீட்டுல கண்ணுக்கு குளிர்ச்சியா ஒரு பெண் , நாட்டாமை பண்ண எனக்குக் கீழே ஒருகூட்டம் . அது போதும்.
பெண்: "ஹார்ட் அட்டாக் வந்தா என்ன முதலுதவி செய்யணும் டாக்டர்?"
டாக்டர்: "எதுக்கும்மா கேக்கறீங்க?"
பெண்: "பட்டுச்சேலை வாங்கின பில்லை என் புருஷன் கிட்ட காட்ட வேண்டிருக்கு."
ஓர் ஊருக்கு புதிய மனிதன் ஒருவன் வந்தான்.
‘‘எங்கே இருந்து வருகிறாய்? என்று கேட்டார்கள்.
‘‘தேவலோகத்திலிருந்து வருகிறேன் என்றான். கேட்டவர்கள் சிரித்தார்கள்.
‘‘உன்னை யார் இங்கே அனுப்பி வைத்தது?
‘‘கடவுள்தான் அனுப்பி வைத்தார்.
கேட்டவர்களுக்கு மேலும் சிரிப்பு.புத்தி சரியில்லாதவன் என்பதாகப் புரிந்து கொண்டு அவனை கோயிலுக்குக் கூட்டிச் சென்றார்கள். மனநலம் பாதிக்கப்பட்டவர்களைத் தெளிய வைக்கிற கோயில் அது. அங்கே இருந்த கல் மண்டபத் தூணில் இவனைக் கட்டிப் போட்டு விட்டார்கள்.இப்போது அவன் சிரித்தான்.
‘‘ஏன் சிரிக்கிறாய்?
‘‘என்னை அனுப்பி வைக்கிறபோது கடவுளே சொன்னார், இப்படி எல்லாம் நடக்கும் என்று!‘‘எப்படி எல்லாம் நடக்கும் என்று?‘‘உன்னைக் கட்டிப் போடுவார்கள்... கைகொட்டிச் சிரிப்பார்கள் என்று சொன்னார் கடவுள். அவர் சொன்னபடியே நடக்கிறது. ஆகவே, நான் அவருடைய தூதன் என்பதற்கு இதைவிட வேறு என்ன நிரூபணம் வேண்டும்?
மக்கள் யோசித்தார்கள்.
‘‘சரி. நீ என்னதான் சொல்ல வருகிறாய்?‘‘நம்புங்கள்... நான் ஒரு தீர்க்கதரிசி. கடவுளால் இங்கே அனுப்பப் பட்டவன். உங்களுக்கு வழிகாட்டவே இங்கே வந்திருக்கிறேன்.இப்போது இன்னொரு சிரிப்புச் சத்தம். இவனைவிட பலமாகச் சிரிப்பது கேட்டது. அந்தச் சத்தம் எங்கே இருந்து வருகிறது? அவனுக்குப் பின்னால், அதே மண்டபத்தில்! அங்கே இன்னொரு மனிதன் தூணில் கட்டப்பட்டிருக்கிறான்.
‘‘நீ ஏன் சிரிக்கிறாய்?
‘‘நீ பொய் சொல்கிறாய்... அதனால் சிரிக்கிறேன்!
‘‘எது பொய் என்கிறாய்?
‘‘கடவுள் உன்னை அனுப்பி வைத்ததாகச் சொல்வது பொய்!
‘‘அது எப்படி உனக்குத் தெரியும்?
‘‘நான் உன்னை அனுப்பி வைக்கவே இல்லையே!
இவன் அதிர்ச்சியோடு அவனை நிமிர்ந்து பார்த்தான்.அவன் சொன்னான் பரிதாபமாக... ‘‘நான்தான் கடவுள் என்று சொல்லிக் கொண்டு இங்கே வந்தவன். ஒரு மாதமாகக் கட்டிப் போட்டு வைத்திருக்கிறார்கள்.
நண்பர்களே!நானே கடவுளின் தூதன் என்கிறார்கள் சிலர்.நானே கடவுள் என்கிறார்கள் சிலர்.உண்மையான கடவுள் எங்கேதான் இருக்கிறார்?
ஒரு மனிதன், ஞானி ஒருவரைத் தேடிப் போனான். ‘‘நான் கடவுளைச் சந்திக்க வேண்டும்! என்றான்.அவர் ‘பளார் என்று இவன் கன்னத்தில் அறைந்து விட்டார்.இவன் பயந்து ஓடிப் போனான்.பக்கத்திலிருந்தவர்கள் ஞானியிடம் கேட்டார்கள்: ‘‘அவனை ஏன் அறைந்தீர்கள்?
‘‘அவன் ஒரு பைத்தியக்காரன்!
‘‘அப்படியா?‘‘
ஆமாம்! அவனையே அவன் தேடிக் கொண்டிருக்கிறான்!